பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698


திருக்குறளின் உறவுக் காலத்து நூலாகிய கலித்தொகை இம்மலரைப் பிற மலர்களுடன் இணைத்து, 'தெரிமலர்க் கண்ணியும் தாரும்' ஆக்கி நயந்து சூடி யதைப் பாடிற்று. இவற்றால் அனிச்சப்பூ சூடும் பூ. மோந்த அளவில் குழையக் கூடிய புலன் உணர்வு செடி உயிரினத்திற்கு ஊறக்கூடியதுதானா என்னும் ஐயம் எழ வேண்டியதில்லை. தொடுகின்ற ஊற்றுனர்வால் வாடுகின்ற தொட்டால் சிணுங்கி இலையைக் காண்கின்றோம். ஒளிக்கும்-ஒளியின் வெம்மைக்கும், தண்மைக்கும் ஏற்பக் குவிந்து விரியும் மலர்களைக் கண்டுள்ளோம். மின்னலின் ஒளிக்குத் தாழை மலர்வதைக் கண் டோம். வண்டு எழுப்பும் இன்னொலிக்கு மலர்கள் மலர்வதும் மந்தார மலர் வண்டின் வல்லோசைக்கு மலர்வதும் அறியப்பட்டடன. இவை ஒலிக்கும், ஒலியின் மென்மை, வன்மைக்கும் மலர்தற்குக் கரணியமான புலன் உணர்வை அறிவிக்கின்றன. காற்றிற்கும், தவழும் காற்றிற்கும், தாக்கும் காற்றிற்கும் மலர்வதும் துவள்வதும் குழைவதும் நிகழ்கின்றன. 'திரோசிரா என்பது ஒரு சிறு செடி. இதன் இலைகளின் விளிம்பில் மயிரிழை போன்ற உறுப்புகள் நீண்டிருக்கும். ஒர் இலைக்கு 200 இழைகளும் இருக்கும். ஒவ்வொரு மயிரிழையின் நுனியிலும் ஒருவகைச் சுரப்பி துளியளவில் முட்டாகத் தோன்றும். கதிரவன் ஒளியில் இது பளபளப்பதால் சிறு பூச்சிகள் விளக்கில் விழும் விட்டில் போல இலையுள் வந்து விழும். இ லைத் தளத்தில் உள்ள ஒருவகைப் பிசுபிசுப்பில் பூச்சி ஒட்டிக்கொண்டு விடுபடத்துடிக்கும். இத்துடிப்பினால் ஒவ்வொரு மயிரிழையும் தனித் தனியே இயங்கத் தொடங்கி உட்புறமாக வளைந்து இப்பூச்சியை அழுத்திக் கொள்ளும். செடியின் இலையில் சுரக்கும் ஒருவகை நீரியம் பூச்சியைக் குழம்பாக்கிச் செடிக்கு இரையாக்கும். இதில் வியப்பு என்னவென்றால் இம் மயிரிழைகள் தம் செடிக்குப் பொருந்தக் கூடிய பூச்சியாக இருந்தால்தான் வளைந்து அழுத்தும் என்பது. இவ்வாறு உயிரினத்திலும் இரைக்குரியதை அறியும் அளவில் புலன் உணர்வுள்ள செடியினம் இருப்பதை நோக்க அனிச்சம் மோப்பக் குழைவது ஐயத்திற்கோ வியப்பிற்கோ உரியதன்று. - கலி, 91 : 8: