பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

701


நிரல் நிரலாகக் கொள்ளலாம். அதனையும் முறையே கொள்வது பெருவழக்கு. இதன்படி முதலில் கூறப்பட்ட அணிச்சத்திற்கு இரவுப் பொழுதைக் கொள்ள அதிகம் வாய்ப்பிருக்கின்றது. இவ்வழியில் அனிச்சம் இரவுப் பொழுதில் மலரும் மலராகலாம். - இம்மலர் குழையும் தனித்தன்மையை நோக்கும் போது மழையும் காற்றும் தாக்கும் கார்ப்பருவம் ஒத்ததாகாது. வாடை தாக்கும் கூதிர்ப் பருவம் வாய்ப்பாகாது. வெப்பம் மிக்க வேனிற் பருவம் ஒவ்வாது. பனி, குளிரானாலும் அதன் உள் விளைவு வெப்பமாகும். தாமரை மலர், - 'சொரி பனி முருக்க நைந்து' போவதை முன்னரும் (இந்நூற்பக்கம் 227) கண்டுள்ளோம். எனவே, பனிப்பருவம் பகையாகும். எஞ்சியுள்ள இளவேனிற் பருவம் உரியதாகலாம். இக்கருத்து அகச்சான்றில்லாது உய்த்துணர்வால் கொள்ளப் படுவது. - அடுத்து அணிச்சத்தைப்பற்றி நிகண்டுகள் குறித்துள்ள வற்றைக் காணவேண்டும். - 'அனிச்ச மர மும் வேரி யும் நறவம் (கள்)" 資。 . - -எனப் பிங்கலம் அனிச் சத்தை மரம்’ என்று குறித்துள்ளது. அனிச்சத்தைப் பெரும்பகுதி மரவரிசையில் நிகண்டுகள் வைத்துள்ளதாற் போலும் உரை யாசிரியர் சிலரும், நிகண்டுகளைப் பதிப்பித்தோரும், தொகுத் தோரும் அனிச்ச மரத்தின் பெயர் என்று குறித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழாசிரிய நண்பர் ஒருவர், அனிச்சமரம் திருமரைக்காட்டுக்கு அண்மையில் உள்ள குரவப் புலத்தில் உள்ளது. தற்போது பூத்துள்ளது' என்றார் ஆர்வமுடன் சென்று கண்டேன். மலர்க்கொத்தில் அனிச்சத்திற்குரிய தனித் தன்மை இல்லை. அங்குள்ள முதியோர் அதனை மருதமரம் என்று தெளிவாக்கினர். இதனையே பேராசிரியர் எம். எம். சோமசுந்தரம் அவர்கள் கண்டு 'அனிச்சம் ஒரு மரவகை' என்று ஒரு கட்டுரை யில் எழுதினார். இத்தொடர்பில் அனிச்சம் ஒரு மரம் என்றுகூறுதல் பொருந்தாது . - இப்பூ 'மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' எனப்பட்ட தன்றோ? இதன்படி இது மாதர் அடியில் பட்டு உறுத்த வேண்டும். "அனிச்சம் மிதிப்பினும்' என்றது போல் மாதர் சிவ. சி. 1404 பிங். தி 9714,