பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/724

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704


வெப்பப் பதத்தால் குழைவது. குவிவது வேறு குழைவது வேறு. அனிச்சம் குழைவது. மற்றைய இரண்டும் குவிவன. எனவே, அனிச்சம் அவைதாம் என்பது பொருந்துவதாக இல்லை. அடுத்து மருத்துவ நூல்களில் அனிச்சை' என ஒன்று பேசப்படுகின்றது. அதனை அகத்தியர் குணபாடமும் போகர் கருக்கடையும் 'அனிச்சம்' என்று குறிக்கவில்லை, அனிச்சை' என்கின்றன. குணபாடம் நாகமல்லி’ என்னும் மூலிகையின் மறு பெயராகவே அனிச்சையைக் காட்டியுள்ளது, அந்நாகமல்லிக்குக் குறிக்கப்பட்டுள்ள தன்மை அனிச்சத்தை அணுகுவதாக இல்லை. போகரது கருக்கடைப் பாடல் "அனிச்சையிட பேர்தனையே அறியக் கேளு' என அனிச்சை' என்றது எனவே, அனிச்சை, அனிச்சத்தினும் வேறான மருந்து மூலிகையாகின்றது. 'அருப்பலம்' என்றொரு பெயர், இதற்குக் கணம் இன்மை கரணியமாக ஏற் பட்டிருக்கலாம் நிகண்டுகளே 'பலம்’ என்பதற்கு 'நிறை என்று நிறையளவுப் பொருளைக் காட்டியுள்ளன. நிறை யில்லாதது - பலமில்லாதது என்னும் பொருளில் இப்பெயர் அமைந்திருக்கலாம், அருமை இன்மைப் பொருளைத்தரும். இவ்வாறாயின் அருமை + பலம் = அரும்பலம் - அருப்பலம் ஆகியிருக்கலாம் - மலைஞாலத்தில் உப்பணிச்சம்' என்றொரு முட்செடி உள்ள தாகக் கூறுவர். அனிச்சம் என்னும் பெயர்த் தொடர்பு அன்றி மற்ற வகையில் வேறுபட்டது என்கிறார் மூலிகை அறிஞர் இரா. குமாரசாமி, ! இனி, அனிச்சம் என்னும் சொல்லைக் காண வேண்டும். இம்மலர் குழைந்து விரைவில் அழிந்துவிடுவதைக் கொண்டு அதித்தியம்' எனப்பட்டு, அது அநித்தம் -அனித்தம் ஆகி அணிச்சம் ஆகியிருக்கலாம் என்பர். எதிர்மறைப் பொருளைத் தரும் முன் ஒட்டு எழுத்தான 'அ' இணைந்து உருவான வடமொழிச் சொல் சங்ககாலத்தில் தமிழில் புகவில்லை. எனவே, இது வடமொழிச் சொல்லுருவம் அன்று. அனிச்சம் என்னும் சொல் ஒலிப்பில் தொடர்புபடுத்திப் பார்க்கத் தமிழில் பணிச்சை என்றொரு சொல் உண்டு. இச்சொல் மகளிரது ஐம்பாற் கூந்தலில் ஒருவகையைக் குறிக்கும். 'பணிச்சை என்றொரு மரம் உண்டு. பெருங்கதை இதனை, > 、マ