பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/725

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

705


'பால்வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும்' என்றும் 'பணிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து 2 என்றும் பனிச்சை மரத்தைப் பாடியுள்ளது. கஞ்சாங் கோரைக்கும் பணிச்சா' என்றொரு பெயர் கூறப்படும். இப்பாங்கில் நோக்கினால் அனிச்சம்' என்பது அணிச்சு' என்னும் தமிழ்ச்சொல் அம் விகுதி பெற்றதாகும். அழகு, மென்மை என்னும் பொருள் வடிப்பை அகரம் தன் வளர்ச்சி வேர்ச்சொல்லால் பெறும். அ - அல் - அன் - அணி - அனிசு - அனிச்சு என வளர மொழியியல் நெறி இடந்தருகின்றது. இவ் வகையில் உருப்பெற்ற அனிச்சம்' என்னும் சொல் மென்மை என்னும் பொருளுட்டம் கொண்டதாகும். மென்மைத் தன்மையால் பெயர்பெற்ற அனிச்சத்தை எண்ணிய பாவேந்தர் பாரதிதாசனார் தென்றலை அதன்பால் தழுவ விட்டார். வன்மைப் பொருளையும் தூளாக்கும் வல்லமை கொண்ட காற்று, அனிச்சத்தின் மென்மையைக் குலைக்க விரும்பாதாம் : 'திண் குன்றைத் துரள் துர ளாகச் செய்யினும் செய்வாய்; நீஓர் நுண் துளி அனிச்சப் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய் '8 -என்று நோகாது நுழைந்து செல்வதாகப் பாடிள்ளார். அனிச்சம்பற்றி முழுமையாக அறியும் வாய்ப்பு இன்னும் நேரவில்லை. உறுதியாக அணிச்சத்தை அடையாளங்கான முடியாமையால்தான் செடியியலாரும் அதற்கென நேரடியாகச் செடியியல் பகுப்புப் பெயரை அமைக்க இயலவில்லை. இஃதும் அனிச்சம் ஒர் அரிய மலர்' என்பதற்குத் துணையாகின்றது. இச்சிறப்புள்ள அணிச்ச மலர்பற்றி அறிந்துள்ள கருத்துகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்: அனிச்சமலர், மென்மைத் தன்மைக்கு உரியது; குழையும் அளவில் மென்மையானது. இலேசானது. புலன் உணர்வுள்ளது. 1 பெருங் : உஞ்சை : 50 29. 2 பெருங் , உஞ்சை : 51 : 53, 8 அழ. சி , தென்றல் 1, 举45