பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/728

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
708


என்பதற்கு மதில் என்றொரு பொருளை நிகண்டு குறிக் கின்றது. இத்தொடர்பில் சாலமரம் என்னும் பெயருண்டாகி யிருக்கும். சால மரம் என்பது ஆச்சா மரம். ஆச்சா மிகப் பெரும் மரம். 50, 60 அடி உயர்ந்து மிகப் பருத்த அடிமரத்திற்குமேல் கிளைகள் வளர்ந்து 80, 90 அடி உயரம் வளர்வது. எனவே, இது போன்று அமைப்புடைய சுள்ளி பெருமரமாம் ஆச்சா எனக் கருதப்பட்டிருக்கலாம். சுள்ளி, ஆச்சா இரண்டிற்கும் தனித்தனி யே செடியியற்பெயர் இருப்பினும் இரண்டையும் ஒரு குடும்பத் தனவாகவே குறிக்கின்றனர். எவ்வாறாயினும் சுள்ளி ஒரு பெருமரம். எனவே, இதன் பூ கோட்டுப் பூ. "வெண்பூஞ் சுள்ளி" என்றும், 'சுள்ளி வெண் போது சுரும்புணவிரித்து’3 என்றும் பெருங்கதை பாடியுள்ளது. எனவே, இப் பூ வெண்மைநிறங் கொண்டது. (ஆச்சாவின் அகவிதழின் உட்பகுதி கிச்சிலி நிறம்). இதனாற் கட்டப்பட்ட மாலையும் 'ஒளிர் மதி அன்ன சுள்ளி வெண் சூழ்ச்சி (மாலை)' எனப்பட்டது. சுள்ளிப் பூவைத் தலைவன் ஒருவன் தன் காதலிக்குப்பிற மலர்களுடன் தொடுத்துச் சூட்டியதைத் திணைமாலை நூற்றைம் பது பாடியமை கொண்டும் இதனைச் சூடும் பூவாகக் கொள்ள லாம். தொடுக்கப்பட்டனவாகக் கூறப்பட்ட மலர்கள் யாவும் குறிஞ்சி நிலத்தவை. அப்பாடலும் குறிஞ்சித் திணைப்பாடல். இவற்றால் சுள்ளி மலர் குறிஞ்சி நிலத்ததாகின்றது. 8 சீவகன் "சுனைய நீலமும் சுள்ளியும் சூழ்மலர் நனைய நாகமும்’ பிற மலர்களும் கொண்டு அருகக் கடவுளைப் போற்றி யமை கூறப்பட்டுள்ளது. எனவே, இது வழிபாட்டு மலருமாகும். சேரநாட்டு முசிறியில் சுள்ளி என்னும் பெயரில் ஆறு ஒன்று ஓடுவதை எருக்காட்டுர் தாயங்கண்ணனார் பாடினார். திருத்தக்க தேவர் "சுள்ளி வேலி' என இம்மரத்தால் சுற்றுக் காப்பு வேலி அமைந்ததைப் பாடினார். இக்கருத்து கொள்ளிப் பாக்கை மதிலைச் சூழ்ந்து சுள்ளி வேலியாக இருந்ததுடன் இயை கின்றது. இதனால் இம்மலரை மதில் சூழ் மரமலர்' எனலாம். 1. பிங். தி 828 : 1. 5 திணைமா. நூ. 2. 2. பெருங் : இலா 12 : 22 6 சிவ. சி . 1608 8 பெருங் : மகத 1 : 187, 7 அகம் : 149 , 8, 10 彎 4 பெருங் இல . 12 108, 8 சிவ: சி 1565, ν