பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



4. பிசின் மலரா?

பயினி,

'பயினி என்னும் சொல்லின் பொருளைக் கொண்டே இம்மலர் பற்றிக் காணவேண்டியுள்ளது. சங்கப் பாடல்களில் குறிஞ்சிப்பாட்டு ஒன்றே இதனைக் காட்டியுள்ளது. இதனால் இஃதொரு அரியமலர். பயினி என்னுஞ்சொல்லுக்கு கூடுகை, இணக்கம், ஒருவகை மரம் என்னும் பொருள்களைக் காண்கின்றோம். ஒரு மரம்’ என்னும் பொருளை இங்கே கொள்ளவேண்டும். பயின்’ என்னும் சொல் உள்குருத்து, பிசின் என்னும் பொருள்களையுடையது கருவிகளுக்கு கூர்மை ஏற்றுபவன் காரோடன்' எனப் படுவான். அதற்குரிய சானைக்கல் அரக்குடன் செய்யப்பட்டது. - இதனைப் பரணரும் மாமூலனாரும் ஒரே வகைத் தொடரால் 'சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்’’’ எனப் பாடினர். இங்கு அரக்கைக் குறிக்க வந்துள்ள பயின் என்னும் சொல் இக்காலத்தில் பிசின் என மருவி வழங்கப்படுவதாகும். செடியியலில் இதன் பெயர் பினஃச் (PINUS) என்றுள்ளது. இவ்வொலிப்பு பிசினை ஒத்துள்ளமையும் நோக்கத்தக்கது. மிக அருகியதாகக் காணப்பட்ட இது பிசின் என மருவி வழங்கும் தமிழ்ச்சொல் வழி செடியியலில் அறிமுகமாகியுள்ளது எனலாம். இச்சொற்பொருள் கொண்டு, பாதிரி முதலியன போன்று இம்மலர் பிசுபிசுப்பான சாற்றைக் கொண்டதாகலாம். அரக்கு போன்ற செம்மை நிறத்தது. குறிஞ்சி நிலத்துக் கோட்டுப் பூ, பெருங்கதையில் மர வரிசையில் வைக்கப்பட்டுள்ள இது பயில்பூம் பயினி' எனப்பட்டுள்ளது. இதுகொண்டு இதன் பூக்கள் பலவாகச் செறிந்திருக்கும் வகையில் கொத்துப் பூவாகும். பருவங் கொள்ளுதற்கில்லை. ※、磁系该莎总以84s孙思兹函&巫、° 1 குறி. பா : 89, 3 பெருங் : இலா 12 : 17. 2 அகம் : 386 * 9; 1 : 5.