பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/733

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
713


யிடும். முட்டையிலிருந்து புழு பிறந்து அது பூச்சியாகித் தன் மேல் ஒட்டிய தாதுத் துாளுடன் புறத்தே வெளிப்படும். இப்பூச்சி 'அத்திப் பூச்சி' எனப்படும். வேறு அத்திப் பூச்சியின் தொடர்பால் தாதுத் தூள் கலப்பு நேரும். இவ்வாறாகும் சேர்க்கையால் சூல் பிடித்துப் பிஞ்சாகும். இவ்வாறு இப்பூச்சி இதற்கு உதவுகின்றது. இப்புழுப்பூச்சி உள்ளே இருப்பதால்தான் "அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை - பூச்சி" என்றனர்.

செடியியல் அறிஞராகிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும்,

"உதும்பர (அத்தி) தருவில் ஒருகனி யதனுள்

பிறந்திறும் அசகம் (பூச்சி) இதனினும் கோடி"1 என்று பாடினார்.
  இப்பூச்சியின் உதவியால் தாதுத்தூள் பிற இன அத்தியுடன் இணைந்து ஒட்டினங்கள் இயற்கையாகவே பெருகின. இவ்வகையில் 700 க்கு மேற்பட்ட இனங்கள் உலகில் உள்ளன.
  காட்சியளிக்காத அரிய அத்திப் பூ மருதநிலத்துக் கோட்டுப் பூவாகும். காய்க்கும் பருவமே பூப்பருவமும் ஆகின்றது. அத்தி வகைகளில் பல உள்ளமையால் பருவங்கள் வேறுபடுகின்றன. பொதுவில் அத்திப் பூ பனிப்பருவப் பூ எனலாம்.
  அத்திக்காய் சமையலுக்காகும். ஒட்டு அத்திக் கனி சுவை யானது. பூவின் வடிவமைப்பால் 'இது குடத்துப் பூ.'
           7. பெருமரத்தின் சிறுமலர். 
                ஆல்.
 அத்தி இனத்தைச் சேர்ந்தது ஆலமரம். மர அளவில் ஆல் மிகப் பெரிது. அது விடும் விழுதுகளால் பரப்பளவிலும் பெரியது. சென்னை அடையாற்றில் உள்ள ஆலமரமும் குறிப்பிடத்தக்க பெரியது. இருப்பினும் உலகில் மிகப்பெரிய ஆலமரங்கள் உள்ளன. பெரிய அலெக்சாந்தரது 7000 படைவீரர்கள் இளைப்பாறுதற்கு ஒர் ஆலமரம் இடந்தந்தது என்பர்.
  மரத்தால் பெரியது,மலரால் சிறியது. அத்திப்பூப்போன்றே அனைத்து அமைப்புகளையும் கொண்டது ஆலம் பூ அத்திப்

1. மனோன் : 4 : 1 : 165, 166,