பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/734

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
714

பூவின் முழுக் குட அளவில் பகுதி அளவினது. கோள வடிவமைப் புடையது. உள்ளே நுண்ணிய அளவில் எண்ணிக்கையற்ற இளஞ்செம்மைநிறப் பூக்களைக் கொண்டது. இதற்கும் தாதுத் துரளைக் கலந்து குலுக்கு உதவ அத்தியைப்போன்று பூச்சி. முட்டையிட்டு உதவுகின்றது. . . அத்தியைப் போன்றே இஃதும் மருத நிலத்துக் கோட்டுப் பூ இளவேனிற் பருவப் பூ. - . இம்மரத்திற்குத் தொன்மரம்’ என்றொரு பெயர் உண்டு இதன் பழமையை இப்பெயர் சொல்கின்றது. ஆலம்பூ மருந்திற்குரியது. அகத்தியர் குணபாடம், 'சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்கடுப்பைக் கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் - நல்லாலின் பாலும் விழுதும் பழமும் விதை யும்பூவும் மேலும் இலையுமென விள்' - - - - என மிகக் கடும் நோய்களாகிய மேகம், உள்கடுப்பு, நீரிழிவு ஆகியவற்றை ஆலின் அனைத்துறுப்பு களும் போக்கும் என்கின்றது. இதிற் பூவும் இடம்பெற்றுள்ளமை இது பூப்பதை அறிவிக்கும் சான்றுமாகும். ஆலம் முகிழைக் கொண்டும் மருந்துகள் படைக்கப்படுகின்றன. 8. முசு மலர். Lj6Uf!. "ஆலைப் பலா ஆக்கலாமோ' -என்று பாடினார் பிற்கால அவ்வையார். ஆலமரத்திலும் பால் உண்டு; பலா மரத்திலும் பால் உண்டு. இரண்டிலும் பழமும் உண்டு. ஒன்று பறவைகட்கு இரை. மற்றொன்று மாந்தர்க்குச் சுவையுண்டி. பாலும் பழமுங் கொண்டு இரண்டையும் நோக்கினால் பலா சிறந்தது. சுவை யால், அளவால் பலாக் கணி வேறுபட்டது. 'பூவாதே காய்க்கும் மரமும் உள” எனப்பட்டது, பலா வையும் அம்மரமாகக் கோளி என்று குறித்தனர். பூவாது பழுக்கும் சூலடிப்பலா' என்றதும் முன்னே அத்திக்குக் கண்டது போன்று பூத்தமை காட்சிப் படாததை வைத்தேயாகும். பூவாது 1. தணி. சி, அவ்வை 62 3. சித, மு, கோ : 8 : 17 .ே நல்வழி : 35 *