பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38


அரசர்க்கு மார்பு மாலையாம் தாரைச் சின்னமாக்கியதுடன் தலையிற் சூடும் கண்ணியையும் சின்னமாக்கினர். முடிமன்னர் மூவரும் ஏனைக் குறுநில மன்னரும், வேளிரும், வள்ளல்களும் தத்தமக்கென- தத்தம் அரச குடும்பத்திற்கென ஒவ்வொரு பூவை விரும்பி அடையாளப் பூவாகக் கொண்டனர். அப்பூவே நிலைத்த சின்னமாகத் தலைமுறை தலைமுறைக்கும் ஆயிற்று. சோழர் 'ஆர்' என்னும் ஆத்திப் பூவையும், பாண்டியர் வேப்பம் பூவையும் சேரர் போந்தை' என்றும் பனம்பூவையும் சின்னப்பூக்களாகக் கொண்டனர். 'ஆரங்க கண்ணிச் சோழர்" 61 "மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து வெம்போர்ச் செழியன் 82 'போந்தைக் கண்ணிப் பொறைய 83 என்றெல்லாம் இலக்கியங்கள் அவரவர் உரிமைப் பூவைக் குறிப்பிட்டுப் பாடின. சின்னமாக மன்னர் முடியில் ஏறியும், மார்பில் தவழ்ந்தும் இடம் பெற்ற பூக்கள் அவர்களையும் தமக்குள் அடக்கித் தம் மூலம் அவர்கள் அறிமுகம் பெற வைத்தது. சோழனே நீயும் சோழன்; நின்னை எதிர்ப்போனும் சோழன் -எனச்சொல்லப் புகுந்த கோஆர்கிழார் "தின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைத் தன்று'64-என்று பூக்களை வைத்தே பாடினார். நின்னைப் பகைத்தவன் சேரனும் அல்லன், பாண்டியனும் அல்லன் என்று சொல்லப் புகுந்தவர், "இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்' 6 -என்று பூக்களைச் சொல்லியே அறிமுகப்படுத்தினார். 61. சிலம்: ; பதிகம் :12, 82. புறம் : 79 : 2, 4. 68 சிலம்பு : 27 : 126, 64 புறம் : 45 : 3, 4, 65. புறம் : 45 : 1.2.