பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720


ஒன்றை நோக்க ஒன்று எளிமைப்படுவதுண்டு. மலர் களிலும் இவ்வாறு காணப்படலாம். எனினும் இங்கு அவ்வகை யில் அன்றிப் பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, ஒருவகையில் அருவெறுப்பேற்றல், பொதுவில் ஒதுக்கப் பட்டமை என்பவற்றில் சில பல கரணியங் கொண்டு மலரில் எளியவை அமையும் நம் பார்வையில் எளியனவாயினும் இலக்கியப் பார்வையில் இவை எளியன அல்ல. வண்ணனைக்கும் உவமைக்கும் இலக்கிய நோக்கிற்கும் புலமைச் சான்றோரால் எடுத்துக்கொள்ளப்பட்டவை. எளிமைக்குக் கரணியமிருப்பினும் நிறத்தால், தோற்றத்தால் வடிவால் இன்ன பிறவற்றால் எம்மலரும் தன் தகுதியை விட்டதன்று. இந்நோக்கில் நின்று சில எளிய மலர்களை அடுக்கலாம், இவ்வடுக்கும் தகுதிப்பாடு கருதிய அடுக்கு அன்று என்றாலும் புலமைச் சான்றோரது ஆட்சியாலும் இலக்கிய இடத் தாலும் முந்தி வருவன உள. ஒருவர்படைத்த வண்ணனையையோ உவமையையோ பலரும் வழிமொழியும் பாங்கும், முந்திக்காண வாய்ப்பளிக்கின்றது. இவ்வகையில் நெருஞ்சிமலர் காணத்தக்கது. 1. சுடரோடு திரிதரும் மலர். நெருஞ்சி. நெருஞ்சி என்றதும் முகம் சுளிப்போம். கண்ணிற்கினிய அதன் மலர் இருக்கக் காலில் தைக்கும் முள்தான் நினைவின் முனைக்கு வருகின்றது. தழுவிக்கூடி இன்பந் தந்த காதலன், நழுவிப் பிரிந்து துன்பந் தந்தான். அதனை எண்ணி நெஞ்சம் நொந்த காதலி நெருஞ்சியின் மலரையும் முள்ளையும் உவமையாக்கி, 'நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநங் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே." 1 - என்று கவன்றாள். இதனைப்பாடிய அள்ளுர் நன்முல்லையார் மலரோடு முள்ளுக்கும் குறுந் : 202 : 2-4.