பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

721


இலக்கிய இடம் தந்தார். நடப்போtச்குத் தரையில் இடையூறாக இருப்பதால் இதற்கு ஆங்கிலத்தில் தரை இடையூறு' என்னும் Gura5sif $ * TRIBULUS TERRESTR1S' srsste, Quufle Lorf, - திருவள்ளுவப் பெருந்தகை இதற்கொரு மெருகேற்றினார். மென்மை வாய்ந்த 'அனிச்சமும் அன்னத்தின் துவியும் மகளிர் மெல்லிய பாதத்தில் முள்ளாகத் தைக்கும் என்பவர், அம்முள்ளாக இந் நெருஞ்சி முள்ளைக் காட்ட எண்ணினார். எண்ணியவர் நெருஞ்சி முள்' என்றன்றோ சொல்ல வேண்டும்? பூம் பாவையர் மெல்லடிக்குச் சொல்லாலும் முள்ளை வைக்க மனம் வராமல், "மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' - என்றார். முள்ளுக்கு இலக்கிய மெருகேற்றிப் பழம்' என்றமை ஒரு பங்கு. முற்றிய காய் முள் ஆகையால் பழம் என்றமை பொருந்தும். இவ்வாறெல்லாம் முள்ளால் அல்லல் தந்தாலும், பாழ்செய் தாலும் இதன் மலர் தனக்கென ஒரு நல்லிடத்தைப் பெற்றுக் கொண்டது. அதனையும் தனது செயலால் பெற்று நிலை நாட்டிக்கொண்டது. இப் பூ ஈட்டி போன்ற ஐந்து புற விதழ்களை உடையது. விசிறி வடிவத்தில் ஐந்து அகவிதழ்களை உடையது. விசிறி இதழ்களுக்கு இடையிடையே ஈட்டிப் புறவிதழ்கள் தோற்றமளிப் பது ஒர் அழகமைப்பாகும். ஒவ்வோர் அகவிதழின் மேலும் ஐந்தைந்து மகரங்கள் அமைந்திருப்பதும் ஒர் அழகமைப்பு. இவற்றால் இது "நிறையிதழ் நெருஞ்சிப் பூ' எனப்பட்டது. "... ... நெருஞ்சிப் பொன்புனை மலர்' (பெருங் : இலா : 4 : 14, 15.) 'சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ" (கல் : 65 : 1.5) * - என்றபடி இதன் இதழ்கள் பொன்போன்ற மஞ்சள் நிறத்தவை. பொன் போன்ற தூய்மைப் பூ என்னும் பொருளில் பசலை வான் பூ' எனப் பட்டது. - - இவ்வாறு வடிவமைப்பாலும் தோற்றத்தாலும் பொன் போன்ற நிறத்தாலும் இம்மலர் அழகு மலராகிக் கண்ணிற்கு இனிமை பயப்பதால், - 1 குறள் : 1120.