பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/742

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
722


'நெருஞ்சிக் கட்கு இன் புதுமலர்' - எனப்பட்டது. அளவால் இது சிறிய பூ.'சிறு பூ நெருஞ்சி" என்றே இலக்கியங் கள் பேசும், பூ சிரியதாயினும் தன் செயலால் ஒரு பெரும் பூ பெற்றுள்ள பெரும்பெயரை முற்காலத்திலேயே பெற்றுக் கொண்ட்து குறிப்பிடத்தக்கது. பூக்களில் பெரியது தாமரை. அதற்கடுத்ததாகச் சூரிய காந்திப் பூ எனப்படும் கதிரவக் காமிப் பூ உள்ளது. இஃது அமெரிக்க இனத்துப் பூவாக உலகிற் பரவியுள்ளது. இதற்கு இப்பெயர்.வரக்காரணம் காலை முதல் மாலை வரை கதிரவனை' நோக்கியபடி மலர்ந்திருப்பதே. இக்கருத்து உண்மை என்பது பிற்காலத்தில் கண்டறியப்பட்டது. மருத்துவ ம ைலய கராதி இதனை ஞாயிறு திரும்பி என்று குறித்தது. இது ஞாயிற்றை நேர்க்கியே திரும்புவதால் இக்குறிப்பு. ஆனால், சிறு பூவாகிய நெருஞ்சிப் பூ இத்தன்மை உடையது என்பது சங்க காலத்திற்கு முன்னரே அறியப்பட்டது. இது வானச் சுடராகிய கதிரவனை நோக்கியபடியே திரும்பிக் கிழக்கிலிருந்து மேற்கில் திரிவது. என்னும் பொருளில், "சுடரொடு திரிதரும் நெருஞ்சி' - என அகநானூறு பாடியது. இக்கருத்து ஒரு செடியியல் கருத்து. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழ் மண்ணில் முளைத்த கருத்து என்பதைக் குறிப்பில் கொள்ளவேண்டும். - - கதிரவன் காலையில் எழுவது முதல் சாயுங்காலம் வரை இப் பூ அதனையே கண்டு திரிவதைத் தொடக்க முதலாகப் படிப்படியாக இலக்கியங்களிலிருந்து காணமுடிகின்றது. எனவே, "ஞாயிறு திரும்பி என்பது முதலில் இதற்குப் பொருந்தும். ஆனால் இத்தொடர் சூரியகாந்திக்கு அமைந்து பின்னர் அகர முதலிகளில் இடம்பெற்றது. v 'பாழுர் நெருஞ்சிப் பகலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்க"4 - என ம்ோசிகீரனார் கதிரவனை எதிர்கொண்டழைப்பதாகப் பாடினார். இஃது, உவமையாகக் கூறப்பட்டது. மண்டை என்பது ஒருவகை விண்கலம். உணவுப்பொருள் கிடைக்காத போது இது கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். கொண்காணங்கிழான் என்பானைக்கண்டதும் இம்மண்டை உண்கலம் அண்ணாந்து மலர்ந்ததாகப் பாடினார் 1 குறுந் 202 - . . . . . . அகம்: 886:18. 2 Botanical Gazette : Voľ. 29 : Page 197. * #pá 455; 4, 5,