பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

723


மோசிகீரனார். இம்மலர்ச்சிக்கு உவமையாகத்தான் நெருஞ்சி கூறப்பட்டது. - இவ்வாறு எழும் கதிரவனை நோக்கி எதிர்கொள்வதைக் கல்லாடனாரும், - - "... ... . . எழுகதிர் நேர்க்கிய சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ' என்றார். . . "வெஞ்சுடர் நோக்கும் நெருஞ்சி"2 - என்றது இப்பூ கதிரவனை நோக்கியவாறே இருக்கும் என்பதைக் காட்டுகின்றது. அந்நோக்கமும் கதிரவன் நெறியில் தொடரும் என்பதைத் திருத்தக்கதேவர், ..' ' 'நீள்சுடர் நெறியை நோக்கும் - - . . . . நிறையிதழ் நெருஞ்சிப் பூ' - என்பதால் குறித்தார். இவ்வாறு சுடரொடு திரிதருவதைக் குறிக்கும் அகநானூற்றுப் பாடல் இதனை உவமையாக்கிப் பாடிய அகப்பொருள் கருத்து சுவைக்கத்தக்கது. ஒரு பரத்தை பின்வருமாறு பேசினாள்: --- 'துணங்கைக் கூத்து விழாவில் அச்சேரிப்பரத்தை என் எழிலை ஏசிப் பேசினாளாம். அதற்கு நான் அங்கு வராததே காரணம், நான் வந்திருந்தால் கதிரவனை நோக்கியவாறே அதனுடன் திரிதரும் நெருஞ்சிப் பூவைப்போல எல்லாரும் என்னழகை நோக்கியவாறு என்னுடனே திரிந்திருப்பர்.4 இப்பேச்சால் கதிரவனால் நெருஞ்சிப் பூ எவ்வாறு கவரப் படுவது என்பது புலனாகின்றது. இக்கவர்ச்சியால் இப்பூ கதிரவனுக்கே உரிமையுடையது எனக்கூறுவதுபோன்று மற்றொரு பாட்டு உள்ளது. ஒரு தலைவி கூறுகின்றாள்: - - “.... ... ....ஒங்குமலை நாடன் ஞாயிறு அனையன்; தோழி! நெருஞ்சி அனைய என் பெரும்பனைத் தோளே." - என்றதில் தலைவனுக்குத் தலைவியின் தோள்கள் உரிமையாவனபோன்று கதிரவனுக்கு இப் பூ விதழ்கள் உரிமையாகின்றன. ஒரு தலைவியை, x - . . "... கதிர்நேர் நெருஞ்சியெனத் தன் பால் திரும் புவிழி ஆயமொடு சென்றாள்' - என்று தோழியர் யாவரும் தலைவிமேல் திருப்பிய விழியோடு சென்றதற்கு உவமை 1 கல் 62; 14, 15 4 அகம் 388 : 11–19. 5 குறுந் 315 வுே சி. :49, தி லுெங்கை உலா : 83