பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/744

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
724


யாக்கிப் பேசவைத்தார் துறைமங்கலம் சிவப்பிரகாசர், இவ்வாறு கதிரவனோடு திரிதரும் மலர் வேறு எவ்வகைக் கவர்ச்சி இடை பீட்டாலும் தன் மலர்முகத்தைத் திருப்பாது-மாற்றாது என்பதைக் கொங்குவேளிர் பாடினார். அருந்தவம் செய்வோர் தனக்கும் கதிரவனுக்கும் இடையே தோன்றினாலும் அவரை வழிபட வேண்டிய கடமையையும் கொள்ளாமல் கதிரவனையே விரும்பும் நெருஞ்சிப் பூ என்பவர், - 'அருந்தவர்க் காயினும் திருந்துமுகம் இறைஞ்சாது செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப் பொன்புனை மலரின் புகற்சி (விருப்பம்) : -என்று பாடினார். நெருஞ் சியின் இவ்விருப்பத்தை உவமையாக்குபவர், "காதலர்க்கு அவாஅம் காம நோக்கு" - என்று பாடினார். இதனை மாற்றி நோக்கினால், நெருஞ்சிப்பூ கதிரவன்மேல் காமங் கொண்டதாகும். அதனால் இப்பூவைக் கதிரவக் காமிப் பூ" - சூரிய காந்திப் பூ எனலாம். இக்காமத்தால் இப்பூவிற்குக் காமரசி' என்றொரு பெயர் வழக்கம் உண்டு, மேலே கண்ட பாடலில் கொங்குவேளிர் இந்நெருஞ்சியைப் 'பைங்கொடி" எனக் கொடியாகக் காட்டியுள்ளார். பரவலாகத் தரையில் வளர்வதைக் கொண்டு கொடி என்றார். ஆனால், இது நிலச்செடி. ஊர்ந்து பரவும் செடிவகை. இதனைக் குமட்டுர்க்கண்ணனார், 'ஊரிய (பரவிய) நெருஞ்சி' என்றார். எனவே இது நிலப் பூ. அள்ளுர் நன்முல்லையார், "புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி' 4 என்றார். புன்புலம் இங்கு முல்லையைக் குறிக்கும். இதன்படியும் நெருஞ்சி முல்லை நில மலர். - இம்மலர் கண்ணுக்கினிய மலராயினும் குறிப்பிடத்தக்க மணங்கமழாதது. அளவில் மிகச் சிறியது. எனவே சூடப்பட வில்லை. சூடப்படாத குறைமட்டும் அன்று; தன் முள்ளால் பாழ் செய்யும் சின்னமாகவும் ஆனதன்றோ? இப்பாழ்படுத்தும் சின்ன மாக இதனுடன் சேர்த்து நோக்கத்தக்க எளிய பூ எருக்கம் பூ. 1 பெருங் : இலா : 4 ? மருத்துவ மலைதகராதி