பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/745

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

725


2. குவி முகில் மலர்.

எருக்கு.

பகைவனது குடும்பம் பாழ்பட வேண்டும் என்று ஏ. சுவோர், - 'உன் வீட்டில் எருக்கு முளைக்க' - என்பர். நெருஞ்சியைப் போன்று எருக்கும் பாழ்பட்டதற்குச் சின்னமாகக் கொள்ளப் பட்டது. நெருஞ்சிக்கு முள்ளைப் போன்று எருக்கிற்கு அதன் பால் கடுமையான உடன்பிறப்பு. இதன் இலை "புல்லிலை எருக்கம்" எனப்படும். இப்பூவும் "புல்லெருக்கம்" எனப் புன்மையாகவே குறிக்கப்படும். இங்கு. புன்மை சிறுமையன்று. கெடு மன வீச்சால் புன் மை’ என்று குறிக்கப்பட்டது. கபிலர், புறத்தில் இப்பூவிற்கு ஒர் இடம் வைத்துப்பாடினார் ‘பூக்களில் நல்லனவும் உள்ளன; தியனவும் உள்ளன. புல்லிய இலையை உடைய எருக்கம் பூ இவ்விரண்டிலும் சேர்ந்தது அன்று. எருக்கம் பூவையும் ஒருவர் விரும்பிப் படைத்தால் கடவுளர் ஏற்க மாட்டேன் என்று விடமாட்டார். - - என்றார். எருக்கம் பூ பூக்களில் நல்லதும் அன்றாம்; தீயதும் அன்றாம். பின் எந் நிலையை உடையது? கபிலர் மேற்கண்டவாறு விளக்கி இப்பூவை உவமை காட்டிக் குறிக்கும் கருத்து அதன் நிலையை அறிவிக்கின்றது. 'நல்லவும் தீயவும் அல்ல; குவியிணர் புல்லிலை எருக்க மாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா வாங்கு மடவர் மெல்லியர் செலினும் கடவன் பாரி கைவண் மையே." 1 இதில் எருக்கம் பூவை உவமையாக்கி, எருக்கம் பூவையும் கடவுளர் ஏற்றுப் போற்றுவது போன்று, பாரி வள்ளல் தன்னிடம் வரும் அறிவற்ற எளியவரையும் வரவேற்றுப் பரிசளிப்பதைக் கடமையாகக் கொண்டவன்’ - என்றார். இங்கு பாரி.வள்ளல் கடவுளாகவும், அறிவற்ற எளிய மக்கள் மணமற்ற எளிய எருக்கம் பூவாகவும் ஆயினர். இவ் வகையால் எருக்கம் பூ எளிய பூவாகக் கபிலரால் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளது. எருக்கம் பூவுடன் இழிவு சிறப்பும்மை கூட்டிச் சொல்தல் மரபு. - - . | pಹಿ ' 14,