பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728


ஊர் சிரிக்கடிக்கும் செயல். ஊராரும் தலைவனைப் பார்த்துச் சிரிப்பதும் உண்டு. தலைவன் செய்துகொள்ளும் ஒப்பனை பித்தேறியவன் போன்று (இவனும் காமப் பித்தேறியவன்) செய்து கொள்வது. மணிமேகலையிலும் வரும் பித்தன் "எருக்கில் கோத்த மாலைய’ னாக வந்தான், பித்தனாம் சிவபெருமான் கோலமாக இதனைக் குறிப்பிடுவர். மடலேறுவதற்குரிய ஒப்பனைக்கும் சிவபெருமானது கோலத்திற்கும் தொடர்பு காட்டுவார் போன்று மாணிக்கவாசகர், 'ஈசன சாந்தும் (திருநீறும்) எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென ஏறுவர் சீறுார்ப் பனைமடலே'1 -எனப் பாடினார். எருக்கு சிவபெருமானுக்குரிய மலர். அதிலும், "வெள்ளெருக்கஞ் சடைமுடியான்' எனக் கம்பர் பாடியது போன்று வெள்ளெருக்கே அவருக்குரியது. பிள்ளையாருக்கும் உரியது. தேவார மூவரும் பிறரும் சிவபெருமானுக்கு எருக்கைச் சூட்டிச் சூட்டிப் பாடினர். வெள்ளெருக்கு பூசெய்க்குரிய எண் மா மலர்களில் ஒன்று. வெள்ளெருக்கால் பூசெய்ய பிறன் மனை நயந்த தீவினை போகுமாம். எருக்குதான் இருக்கின்றதே என்று இக்குற்றத்தைச் செய்துவிடக்கூடாது. திருஎருக்கத்தம்புலியூர் என்றோர் ஊர் ஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு இராசேந்திரபட்டினம் என்றொரு பெயரும்.உண்டு. இவ்வூர்ச் சிவன்கோவில் திருமரமாக எருக்கஞ் செடி உள்ளது. இதன் பால் மருந்துக்காகும். மேலைநாட்டு ஒருவகை எருக்கிலிருந்து பாலை வடித்து ஆவின்பால்போல் குடிப்பராம். வெள்ளெருக்கின் நாரை எடுத்துக் குழந்தைகட்குக் கடிப்பகை யாகக் கட்டும் பழக்கம் உண்டு. - எளிய எருக்கானாலும் அரிய செயல்களையும் செய்வ தாகின்றது. TFGa J ta 8 s * 38 2 § கம்ப:இரா.: வதை : 238 o * * : * ,