பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39


முடிமன்னர் மூவரையும் ஒன்று கூட்டிச் சொல்ல நேருங்கால் ‘'வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர்...... ...... , ...... கொற்ற வேந்தர்”96 என்று பூக்களைக்கொண்டே குறித்தனர். இவற்றினும் மேலாகச் சிலப்பதிகாரத்தில், சினையவர் வேம்பன் தேறா னாகி'67, 68 -என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பூப்பெயரன் ஆக்கப்பட்டான். பூ இவ்வாறு அரசர்களையே ஆளும் நிலை பெற்றது. அரசர் நாளோலக்கத்தில், விழாக்களில் - ஒப்பனைகளில் தத்தம் குடிப்பூவைச் சூடிக்கொள்வர். போருக்குச் செல்லுங்கால் அவ்வப் போர் நிலைக்குரிய சின்னப் பூவையும் சூடிக்கொள்வர். போரெடுத்துச் செல்லுங்கால் வஞ்சிப் பூவைச் சூட வேண்டு மன்றோ? அந்நிலையில் போர்க்குரிய வஞ்சிப் பூவையும், குடிக் குரிய அடையாளப் பூவையும் சூடிக்கொள்வர். 'பொலத் தொட்டுப் பைந்தும்பை - மிகையலங் குழைய பனைச் செரீஇ'6.9 -எனப் புறநானூறு அறிவிப்பதுபோன்று பிற போர்ப்பூக்களையும் குடிப் பூக்களுடன் சூடிக்கொள்வர். - வீரர் பூ இஃதே போன்று போர் வீரர்களும் போர்ச் சின்னப் பூவுடன் தத்தம் அரசர்க்குரிய பூவையும் சூட வேண்டிய சூழல் இருந்தது.19 வெட்சிப் பூவை அணிந்து செல்லுங்கால் அஃது ஆநிரை களைக் கவரச்செல்லும் அறிவிப்பாக இருப்பினும், இவர் எந் நாட்டு மன்னனது வீரர் என்று தெரிவதற்கு அம்மன்னருக்குரிய பூவையும்சூடவேண்டும். களத்தில் கைகலக்கும் போருக்கு உரிய பூ 56 புறம்: 888 : 6-8 67, 68 சிலப்பு : 1.6 : 149 69 புறம் : 22 : 20, 21 - 70 போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகை. -பதிற் : 66; 14, 15,