பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/750

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
730


பாடினார். இவர்கள் பாடியனுமக்கு ஏற்பப் பூளைப் பூ மிக மென்ம்ை யானது. பூளைப் பூ தான் உழிஞைப் பூ என்னும் கருத்து எழுந்தது. இஃது அருகிய கருத்தானாலும் பொருந்தாமையைக் காண வேண்டும். * , அகத்துறையில் மடலேறும்போது பிற பூக்களுடன் பூளைப் பூவும் சூடப்பட்டது. மடல் ஏறுதல் ஒர் அகப்போர். மணஞ்செய்து கொடுக்க மறுத்துத் தலைவியை இல்லத்துள் அடைத்துள்ளதைத் தகர்க்கச் செய்யும் போர் அன்றோ? புறத்துறையில் கோட்டை யைத் தகர்க்கும் போர்ப் பூ உழிஞையன்றோ? இத்தொடர்பில் பூளைப் பூ உழிஞைப் பூப் போலாயிற்று. ஆனால் உழிஞையன்று. எவ்வாறெனில் அங்கும், மடலேறும் தலைவன், 'பூளை உழிஞையோடு யாத்த’ தாகப் பூளை வேறாக வும் உழிஞை வேறாகவும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பட்டினப் பாலையில் கோட்டை மதிலைத் தாக்க எழுந்த களிறு, வேறுபல் பூளையொடு உழிஞை குடி"ச் சென்றதாக உள்ளது. இங்கும் "பூளையோடு உழிஞை" எனத் தனித்தனி வெவ்வேறாக உள்ளன. w - இவையன்றி, இனத்தாலும் இவையிரண்டும் வெவ்வேறு. பூளை செடியினம்; உழிஞை கொடியினம். எனவே, பூளை உழிஞையாகாது. ஆனாலும் பட்டினப்பாலை காட்டும் குறிப்பால் பூளையும் போர்ப் பூவாகக் கருதப்பட்டது. முப்பெருங் கோட்டைகளைச் சிவபெருமான் தகர்த்ததைக் கம்பர் குறிப்பிடும் இடத்தில் சிவபெருமானைப் 'பூளை சூடி" எனப் பாடியுள்ளார். இப் போரில் சிவபெருமான் வெற்றி பெற்றதாற்போலும், "பூளை வெற்றிப் பூவா கும்மே" என்றது. பிங்கலம். பூளைப் பூ) குறிப்பிடத்தக்க மனங்கொண்டதன்று. பாழ்பட்ட இடத்தில், எருக்கு முளைத்தல் குறிக்கப்படுவது போன்று இப்பூண்ச், செடியும் குறிக்கப்படும். இது மடலேறும் பூக்களில் ஒன்று. இவற்றால் இதனை எளிய மலர் எனலாம். . - - - | ಹಿ.: 104 ? ു. ജട്ട 39, £5. ஆங்துs 1335, 4 பிங், *H49%。