பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

731


இதனைச் சிவபெருமான் குடியதைப் பலரும் μrqari, பூதங்களிலும் சாதி கண்டவர்கள் வணிகப் பூதம் பூளைப் பூவைச் சூடியதாக எழுதினர்; சிலப்பதிகாரத்திலும் செருகினர். ஆனால், மாந்தரால் சூடப்படும் மலர் அன்று. விற்பனைக்கு வராத பூக்கள் 'வில்லாப் பூ" எனப்படும். இவற்றுள் பூளையும் ஒன்று. . எருக்கையும் கோவிலில் திருமரம் ஆக்கிய சைவர் பூளையை யும் விட்டாரல்லர். ஆலங்குடிப் பெயர் பெற்ற ஊர்க் கோவிலின் திருமரம் பூளை - திருச்செடி பூளை. அதனால், இவ்வூர் 'இரும்பூளையூர் எனப் பெயர் பெற்றது. ஞானசம்பந்தர், - 'ஏரார் இரும்பூளை இடங்கொண்ட சைனே" 2 -- எனப்பாடியுள்ளார். எளிய மலராயினும் இலக்கியத்தில் பொருத்தமான உவமை வழங்கிய "வரகுச் சோறு மலர்”. - 4. பலி மலர். குரீஇப் பூளை. மருத்துவ நூல்கள் பூளையைப் பீளை என வழங்கும். முன்னே கண்ட பூளையைப் பெரும் பீளை என்பர். அவ்வாறா யின் சிறுபூளை என ஒன்று இருக்கவேண்டும். அதனைக் குறிஞ்சிப் பூப் பட்டியல் 'குரீஇப் பூளை" என்றது. "வேறுபல் பூளை' என்னும் பட்டினப்பாலைத் தொடர்க்கு நச்சர், . - "சிறு பூளையும் பெரும் பூளையும் உண்மையின் வேறுபல் பூளை என்றார்' - என விரித்துப் பூளையின் இருவகைகளைக் காட்டியுள்ளார். . . - - இஃதொரு சிறு குற்றுச் செடி. இதன் பூ நிலப் பூ. கோடைகாலத்தில் பூக்கும். வெண்மை நிறப்பூ பூக்களுக்கிடையே இலை என்று சொல்லும் அளவில் பூக்கள் மிகுதியாகத்தோன்றும். செடியின் அடிமுதல் முடிவரை இவ்வாறு பூக்கள் அமைந்: திருக்கும். செடி முழுதையுமே ஒரு பூங்கொத்து எனலாம். 1 தற் : 146 1 : . ಆಳಿ, ಆ೯೬2 திருவிரும்பூளை 1. 4. பட்.பா.:23; உரை ف من) ،ة ne Gق 2