பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734


6, எக்காள மலர் மத்தம் 'துர மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே’’ -அப்பர். 'ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம்' -ஞானசம்பந்தர். 'மத்த மாமலர் கொன்றை வன்னியும்" - சுந்தரர், "கொன்றை மதியமும் கூவிளை மத்தமும்' . -மாணிக்கவாசகர். 'மத்தமும் மதியமும் வைத்திடும்' - -அருணகிரி. இவ்வாறு சைவச் சான்றோரால் மத்தம்' என்று பாடப் பட்டதை நாம் ஊமத்தம், ஊமத்தை' என்று வழங்குகின்றோம். மேலே காணப்பட்ட அடிகளில் "தூய மத்தம்,' 'எழில் மத்தம்" 'மத்த மாமலர்' என்றெல்லாம் பெருமை பெற்றமை சிவபெருமான் தலையில் இடம்பெற்றதால் ஆகும். - இம்மலர்பற்றிச் சங்கப் பாடல்களில் செய்தி இல்லை. 'மத்தம் என்னுஞ் சொல்லே அக்காலத்சில் தயிர் கடையும் மத்தைக் குறித்தது. ஏலாதி களிப்பு என்னும் பொருளில் பாடியது. காலப்போக்கில் இக்களிப்புப் பொருள்மிகு களிப்பாகி, அஃதே வெறியாகிப் பித்தும் ஆகியது. ஊமத்தையின் வித்து வெறியேற்றும் குணங்கொண்டது. இதனால் இச்செடி மத்தம்' என்னும் பெயர்பெற்றது. - - - சிவபெருமானுக்கு உரியதானமையால் "உன்’ என்னும் நன்மையை - மேன்மையைக் குறிக்கும் அடைமொழி சேர்ந்து 'உன்மத்தக மலர்' என்றும் பாடப்பட்டது. உன்மத்தம், உன் மத்தன் என்பவை பித்து, பித்தன் என்னும் பொருளைக் கொண்டன. * - உன்மத்தத்தின் திரிபுப் பெயரே ஊமத்தம், ஊமத்தை. - இம்மலர் கிளைவிட்டு வளரும். ஒரளவு பெருஞ்செடியின் மலர். எனவே, கோட்டுப் பூவாகும். களைச்செடியாகையால் பாலைநில மலர், பல பருவங்களில் பூக்கும். தனிப்பூ நீண்ட புனல் வடிவங்கொண்டது. திருக்கோவில்களில் ஊதப்படும் எத்காள வடிவம்கொண்டது. எனவே எக்காள மலர்' எனலாம்,

      1. $#