பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/757

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
737


'கள்ளிப்பூ பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி? - தெற்கு வள்ளியூ ரார் தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா' குறத்தி குற்றாலத்துக்காரி. அவளைப் பேசவைத்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர். - - 'தண்டொட்டி’ என்றது தனியொரு அணி அன்று. ஒரு தொகுப்பான காதணியில் ஒர் உறுப்பு. பொன் தண்டில் ஒட்டியிருப்பது. அதனால் தண்டு + ஒட்டி = தண்டொட்டி எனப்பட்டது. அது கள்ளிப் பூ வடிவத்தில் செய்யப்படும். அதனால் அதற்குக் 'கள்ளிப்பூ” என்ற பெயரும் உண்டு. மாந்தர் அணிவதுபோன்று அன்னைக் கடவுளர்க்கும் இதனைச் செய்து வழங்கினர். இதனைக் கல்வெட்டில், - "படுகை நாலும் கள்ளிப் பூ நாலும் கொக்குவாய் - ஒன்றும் சவக்கமிரண்டும் உட்படப் பொன்"2 இவ்வளவு கொண்டது எனக் காணலாம். இத்தண்டொட்டி மலரைத் தரும் கள்ளி பற்றிச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். "கள்ளி போகிய களரியம் பறந்தலை' (புறம் : 245 : 3) 'களரி ஓங்கிய கவைமுட் கள்ளி' (நற் 384:2) - -இவ்வடிகள் கள்ளியின் இடத்தையும் அது கவைத்த முள் உடையதையும் கூறுகின்றன. - 'நொடிவிடு அன்ன காய்விடு கள்ளி' (நற் : 314 :9) என்பது அது திருகியிருப்பதையும் காய்ப்பதையும் குறிக்கின்றது இது திருகுகள்ளி எனப்படும். இதனை வண்ணிக்கும் (பெயரைப் புலப்படுத்தாத) புலவர், "பரல்தலை யோகிய சிரல்தலைக் கள்ளி' (நற் : 169 : 4) என்றார். - இதில் "பரல்" என்றது பாலை நிலத்தின் குறி. "சிரல்’ என்றது. சிச்சிலிப் பறவை. அதன் தலை நீலநிறத்திலும் அலகு செம்மையாகவும் தோன்றும். இதுபோன்று கள்ளியின் தலைப் பகுதி நீல நிறத்தளிரும் செம்மைக் கொத்தான மலரும் கொண்டது. குறத்தி தண்டொட்டியை மாணிக்கத் தண்டொட்டி என்றதும் மாணிக்கம் என்னும் செம்மணி நிறத்தைக் குறித்ததாகும், கள்ளிப் பூ செம்மை நிறங்கொண்டது. சிறிய புனல் வடிவப் பூ. பாலை saraf.14: 2 # ಕಪಿ ಥಿಣಿಕಿ ” !!