பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/758

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
738


நிலத்துப் பூ. முல்லைக்கொடி படர முல்லை நிலத்திலும் பூக்குமாயினும் மூலத்தால் பாலை நிலத்ததாகும். கோடையில் பூக்கும். கள்ளி, குற்றுச் செடியினமாகையால் இப்பூ நிலப்பூ. இதன் நிறமும் அமைப்பும் நிறையப் பூப்பதும் கவர்ச்சி யாகத் தோன்றும். கண்டதும் அள்ளிக்கொள்ளலாம் போன்று இருப்பதை நாலடியார், - ‘அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ’ என்றவர் அடுத்து 'ஆயினும்' என்றார். ஆர்வத்தில் பறிக்க முனைந்தால் முள் ஒரு தடை, கள்ளிப் பால் மறுபகை; நறுமணமின்மை தொடரும் ஒரு தடை. இவற்றை எண்ணிய நாலடியார், ஆயினும், கள்ளிமேல் கைநீட்டார் சூடும் பூ அன்மையால்' என்றார். கண்ணுக்குக் கவர்ச்சியானாலும் பொன்னுக்குச் சின்னமானாலும் சூடத்தகாத எளிய மலர், கள்ளியோடு இணைந்து நிற்கும் மரங்களும் உள. கணி மேதாவியார், "கள்ளிசேர் கார்ஒமை, நாசில்பூ நீள்முருங்கை’2 என்றார். இத்தொடர்புள்ள முருங்கை அடுத்துக் காணத்தக்க மல ராகின்றது, நார் இல்லா மர மலர்: முருங்கை. சிறுமியர் விளையாட்டில் வினா விடையாகப் பாடப்படும் பாடல் இது: . "ஒருபட்டம் திருபட்டம் ஒரியா மங்கலம் செக்குத் திரும்பி செவ்வந்தி மாலை மாடும் கண்ணும் கறக்கிற வேளை ஒப்பன் பேர் என்ன? - முருங்கைப் பூ - முருங்கைப் பூவுங் கடிச்சாரே முள்ளாந் தண்ணியுங் குடிச்சாரே பாம்புக் கையைப் படக்கின்னு எடு' -இதில் அப்பன் பெயர் முருங்கைப் பூ என்றதும், முருங்கைப் 'பூவைக் கடித்ததாகக் கூறியதும் முருங்கைப் பூவை எளியதாகவும், சற்றுத் தாழ்வாகவும் குறித்த குறிப்பை உடையனவாகும்.