பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

739


நாட்டுப் பாடலில் மட்டு மன்று; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் கண்ணன் தன்பால் காமங்கொண்டவளது கைவளையலை எளிதாக எண்ணிக் கவர்ந்தான் என்பதைப் பாடும் திருமங்கையாழ்வாரும் இம்முருங்கையைக் காட்டி, 'நீயிவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையின் தேனா (பிசினாக) முன்கை வளை கவர்ந் தாயே'1 -எனப் பாடினார். நாட்டுப் பழமொழி ஒன்று, 'வித்தையற்றவன் அழகு வாசனையற்ற முருங்கைப் பூ' என்று இதன் மணமற்ற எளிமையைப் பேசுகின்றது. - பூவிருக்கட்டும்; பூவைத் தரும் மரமும் காற்றடித்தாலும், தன் காய்களின் பாரத்தாலும் மடக்கென்று முறிந்துவிடும். அதனால், இதனைப் 'புன்கால் முருங்கை" என்று பாடினர். பாலைநிலத்திற் செல்வோர் இது முறிவதைக் கருத்திற்கொண்டு, இதனடியில் நிழல் கருதி ஒதுங்கவும் மாட்டார் என்றது திணை மாலை நூற்றைம்பது.? இம்மரம் இவ்வாறு வன்மையில்லாததற்கு உரிய கரணியத் தைத் தமிழ்ச் சான்றோர் ஆய்ந்தனர். மரம் நார் பிடிக்காததைக் கண்டறிந்தனர். 'நார் இல் முருங்கை' என்று பதிந்தனர். இப்பதிவை அக்காலத்துச் செடியியல் அறிவு எனல் வேண்டும். பூவாலும் மரத்தாலும் இவ்வாறு எளிமைப்பட்டாலும், உணவாலும் இலக்கியத்தாலும், தன் பெயராலும் இது குறிப்பிடத் தக்க சிறப்பை உடையது. இதன் கீரை உணவுப் பொருளுடன் ஊட்டப் பொருளும் ஆகும். ஊட்டப் பொருளுடன் பிற உணவைச் சமமாக்கும் காப்புப் பொருளும் ஆகும். கீரையுணவால் வயிற்றுக் குற்றம் வராது. பிஞ்சும் காயும் சுவையுடன் நலந் தருபவை. 'முருங்கை உண்ண நொருங்குமாம் மேகம்' - என்றொரு மருத்துவப் பழமொழி மேக நோய்க்கும் இது மருந்தாவதைக் குறிக்கின்றது. இப்பூவால் கண்குளிர்ச்சி ஏற்படும்; பித்தங் குறையும்; நாச்சுவையின்மை நீங்கும். இதனை ஆவின் பாலில் šË அவித்து உண்டு வர, ஆண் வீரியம் கெட்டிப்படும். இவற்றை தியர் குணபாட்