பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/760

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
740


'விழிகுளிரும்; பித்தம்போம்; வீறுருசி ஏகும்: அழிவிந் துவும்புட்டி யாகும்-எழிலார் ஒருங்கையக லாக்கற் புடைவாள் நகையே! முருங்கைப் பூவை மொழி' - என்கின்றது. இப் பூ கொத்தாகப் பூக்கும். தனியொரு பூ நன்கு மலர்ந்த நிலையில் புறவிதழ்கள் ஐந்தும் கவிந்து தொங்கும். அகவிதழ் கள் ஐந்தில் ஒன்று உயர்ந்து நிற்கும். பிற உறுப்புகள் நிமிர்ந்த நிலையில் அமையும். இம்மலரைக் கலப்பிதழ்க் கொத்து’ என்பர். 'நெடுங்கால் முருங்கை வெண் பூ' என்றதன்படி இது வெண்மை நிறமுடைய கோட்டுப் பூ. 'சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை நாரில் முருங்கை நவிரல் வான் பூச் சூரலங் கடுவளி எடுப்ப ஆருற்று உடை திரைப் பிதிர்வில் பொங்கி? -என்னும் மாமூலனார் பாடல் இதன் பாலை நிலத்தைக் காட்டுகின்றது. கடுங்காற்றில்அடிபட்டுக் கடல் அலையின் நீர்த்துளிகள் சிதறுவன போன்று உதிர்வதையும் காட்டுகின்றது. இவரே மற்றொரு பாடலில் ‘ஆலங்கட்டி மழைத்துளி போல உதிரும்’8 என்றார். இவ்வாறெல்லாம் இலக்கியம் பெற்றது இப் பூ. இதற்குரிய பருவம் இளவேனிலும் வேனிலும் ஆகும். முருங்கை, தவசிமுருங்கை, காட்டு முருங்கை, கசப்பு முருங்கை கொடி முருங்கை எனப் பலவகைப்படும். வகை உண்டெனினும் இனம் ஒன்றே. அது முருங்கை இனம். - - “முருங்கை’ என்னும் சொல் ஆய்ந்து முடிவுகாண்பதற்கு உரியதாகின்றது. செடி யி ய லார் இதன் குடும்பப் பெயர் மொரிங்கேசியீ (MORAGECIE) என்றனர். இதன் இனப்பெயர் Gluriflığısır (MORINGA PTERYGOSPERMA) 5rsaı ılıLi'l- 51. இவையிரண்டும் 'முருங்கை’ என்னும் சொல் ஒலிப்பைக் கொண் டவை என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறாயின் முருங்கை எம் மொழிச் சொல்? - 'முருங்கா என்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்த வாறும்’4 - என்றது. வீரசோழியம் என்னும் இலக்கண நூல். இது இலங்கை நாட்டுச் சிங்களமொழிச் 5*.*