பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

743


தனித்தன்மையோடு தமிழ்ச் சொல்லையே தன் பெயராகக் கொண்ட முருங்கை நார் இல்லாத மர மலர்’ ஆனாலும், தமிழ் வேர் உள்ள மலராகின்றது. முல்லை என்னும் தமிழ் மரபு வாழ்வியல் மலரில் தொடங்கிய இம்மலர் ஆய்வு, 'முருங்கை' என்னும் தமிழ்ப்பெயர் மலருடன் நிறைவடைகின்றது. முல்லை முதல் முருங்கை வரை 140 பூக்கள் ஆராயப் பட்டுள்ளன. அதனதன் இனவகை காட்டப்பட்டுள்ளது. கிளை விடும் செடியில் பூப்பது கோட்டுப் பூ என்றும், குற்றாக வளர் வதில் பூப்பது நிலப் பூ என்றும் கொள்ளப்பட்டுள்ளன. உரிய நிறமும், நிறவேறுபாட்டால் வகையும் குறிக்கப் பட்டுள்ளன. நிலம் மாந்தரது தொழில் வளர்ச்சியால் பண்பட்டும், மாறி யும் உள்ளது. அதற்கேற்ப மரஞ்செடிகொடிகள் பரவலாகியுள்ளன. இங்கே குறிக்கப்பட்டுள்ள நிலத்தை அதனதன் மூல நிலமாகக் கொள்ளவேண்டும். பூக்கும் பருவமும் ஒரளவில் அவ்வாறே. மிகச் சில நிற்க, மிக பல பெயர்கள் தமிழ் மூலங் கொண்டவை. ஒவ்வொன்றையும் அவ்வவ்வாறு காண மொழி நெறி இடந்தருகின்றது. அஃதொரு தனி நூலாகும் அளவினது. எனவே, இன்றியமையாதவை சொல்லாய்வு கொண்டன. பூக்களின் மருந்துப் பயன் தமிழில் விரிவானது; மிகு நலந்தருவது. மிகச் சிலவே குறிக்க நேர்ந்தன. ஊர்ப்பெயர், மன்னர் பெயர் முதலியன பூத்தொடர்பில் வரலாற்று நிழல்கள் 6T5ö亨6UTLD。 முல்லை மணத்தில் தோய்ந்து, மரபில் வாழ்வது முதல், முருங்கை நலத்தில் முழங்குதல் வரை இவ்வாய்வு நற்பயன் நல்குவதாக! -