பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பதிப்புரை

"இலக்கியம் ஒரு பூக்காடு” என்ற இந்த வெளியீடு-எங்களது முதல் வெளியீடு.

காலத்தால் பூத்த மலர்கள், கண்ணுக்கு அழகும், கருத்துக்கு இன்பமும் தருகின்ற அழகிய காட்சி போல் தமிழ் இலக்கிய வரலாற்றில் படைக்கப் பெற்ற பல்வேறு இலக்கியங்கள் ஒரு மாபெரும் பூக்காடு.

நறுமணம் வீசும் மலர்கள்போல், நயம்படப் பிறந்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தில் புதுமணம் வீசுகின்ற காட்சியைப் படைக்கின்ற வாய்ப்பை நாங்களும் பெற்றிருக்கிறோம். என்பதில் எங்களுக்கும் ஒரு மகிழ்ச்சி.

பல்வேறு விலங்கினங்கள் - பறவைகள் காலத்தால் தோன்றி, மறைந்து உலகோடு ஒட்டி வாழ்கின்ற எஞ்சியவைகளைக் கணக்கிடும் போதும் - காணும் போதும் அவைகளின் வரலாற்றையும் தோற்றத்தையும் அறிய முயல்வது ஓர் ஆராய்ச்சி.

இந்தப்பணி போலவே 'கவிஞர்கோ' கோவை. இளஞ்சேரன் அவர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியின் மொழியிலே பிறந்த இலக்கியங்களில் கவிஞர்களும், புலவர்களும் கண்ட பூக்களைப் பல இயல்களோடு கண்டு நம் கண்முன் நிறுத்துகிறார்.

இலக்கியங்கள் சுட்டிக்காட்டிய பூக்களெல்லாம் இப்பொழுது நம் கண்களுக்கு அகப்படுவ