பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46


நச்சினார்க்கினியர் 'காவிதிப் பூ என்று காட்டியுள்ளார். வேளாளர்க்கு வழங்கப்படுவதால் இப்பூ அவர்க்குரிய செங்கழு நீர்ப் பூவாக இருக்கலாம். இப்பூவின் பெயராலேயே இப்பட்டம் 'காவிதி' எனப்பட்டது. 5 “காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ'80 -என்றார் நச்சினார்க்கினியர். இப்பட்டம் பெற்றோர், ஐம்பெருங் குழுவில் ஒருவராகி அமைச்சராகும் தகுதி பெற்றவராவர். இவர் எவ்வகை வரியிலிருந்தும் விலக்குப் பெற்றவர். இக்காலத்தில் நம் இந்திய மைய அரசு இவைபோன்று செல்வத்தகுதி, அறச்செயல், அறிவுத்திறன், கலைப்பாங்கு உடைய சிறந்தார்க்கு 'பத்மசிf', 'பத்ம பூசன்' என்னும் பட்டங்களை வழங்குவதைக் காண்கின்றோம். இவை தமிழில் தாமரைத் திரு' “தாமரை அணி எனப்படும். இன்றும் பூவின் பெயரால் பெயர் சூட்டப்பட்டுள்ளமை பழந்தமிழ் மரபின் நிழல் எனலாம். "எட்டி காவிதிப் பட்டம் தாங்கிய மயிலியல் மாதர்'86 எனப் பெருங்கதை காட்டுவதால் அக்காலத்தில் இப்பட்டங்கள் மகளிர்க்கும் வழங்கப்பட்டதைக் காண்கின்றோம். நாளெல்லாம் பூ - அகத்திலும் புறத்திலும் குறியீடாகவும் சின்னமாகவும் பூ அமைந்து பெருமை பெற்றது. ஆனால், தமிழர்தம் அன்றாட வாழ்வில் நுகர்ந்து இன்பம் கண்டதில்தான் பூ நிறைவு பெற்றது எனலாம். பூவின் பிறப்பு காயின் தோற்றத்திற்கு அடித்தளம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் தம் தன்மைகளை மற்றவர்க்கு வழங்குவதில்தான் எவரும் நிறைவாக வாழ்ந்தவராவர். பூ இதற் கும் விதிவிலக்காகவில்லை. இந்த நிறைவைத் தமிழர் பூவிற்கு நிறைவாகவே வழங்கினர். தமிழர்தம் அன்றாட வாழ்வில் எல்லாம் பூவை நுகர்ந்து பயன்கொண்டனர். 8 தொல் எழுத்து 155 உரை 86. பெருங் 2, 3 : 144 -Ξ..