பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48


வீட்டு முகப்பை மலர்ச்செடிகளால் வனப்புறுத்தினர். வீட்டு வாயில்களில் மலர் மாலைகளைத் தொங்கவிட்டு "மலரணி வாயில்: ஆக்கினர். திண்ணையாம் தெற்றிகளில் மலர்க் கொடிகளை வரிசையாகத் தொங்கவிட்டு அழகு படுத்தினர். மாடியில் நிலா முற்றத்தில் தாழிகளில் குவளையை வளர்த்து அது மலரக் கண்டுமகிழ்ந்தனர். விழாக்காலங்களில் செவ்வலரியால் ஆன மாலைகளை இணையொக்க-ஒத்தாற்போல-நறுக்கி அசைந்தாடுமாறு வரிை யாக நாற்றினர். - பொருள் ஈட்டப் பிரிந்து வேற்று நாடு சென்றவர் மீளின் "மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்'8 8 உறவாடும் அன்புடன் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை ஒரு மரபாகவே கொண்டிருந்தனர். சான்றோரோ, மேலோரோ வரின் மலர்தூவித் தொழுது வரவேற்றனர். அந்தி வேளையில் இல்லத்து முகப்பிலும் அறையிலும் மலர்ைப் பலியாகத் தூவினர். விளக்குகளில் மலரைச் சூட்டினர். வணிக இல்லங்களில் பூப்பலிசெய்தனர். கடவுட் பீடிகைகளிலும் மலர்ப்பலி தூவினர். வண்டு மொய்க்காத மலர்களைத் தாமே கொய்து கடவுளர்க்குச் சாத்தினர்; கோவில்களுக்கு வழங்கினர். இவற்றிற்கெல்லாம் வேண்டிய மலர்களுக்கு அவரவர் இல்லங்களில் செடி, கொடி, மரம் வைத்து வளர்த்தனர். பெரும் பூக்கொல்லைகளைப் பெருக்கினர். தெருவில் பெண்கள் மலரைக் கடகத்தில் கொண்டு விலை பகர்ந்து திரிவர். கடைகளில் பல வகை மாலைகள் தொடுத்து விற்றனர். இவற்றிற்குரிய மலர்கள் வண்டி வண்டியாக நிறைக்கப்பட்டு வரும். 'மன நிலை மலர் பெய்து மறு கும் பண்டிகள் '8 பலப்பல பெருநகர்களில் காணப்படும். இளம் மகளிர் பூக்கொய்வர். கன்னியர் பூத்தொடுப்பர். பூத்த குமரிக்குப் பூச்சூடுவர். காத்த கடவுளுக்குப் பூச்சொரிவர். காதலர் பூப்பந்துசெய்து பூம்பொழிலில் விளையாடுவர். - இல்லற வாழ்விற்கு விதை ஊன்றும் திருநாளே மலரின் தொடர்பில் திருமணம் என்று பெயர் பெற்றது. மாலையிட்ட 88. தொல் : கற்பியல் , 5 : 55 89: சீவ சி ; 61