பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49


பின்னரே தாலி கட்டுவர். தாலி கட்டாது போயினும் மாலை யிட்டாலே மணமாயிற்று. பூவைக் கண்டவர் எவரும் பறித்துச் சூடுவது போன்று மணஞ்செய்து கொள்ளாது கூடிப்புணர்பவள் 'பூவிலைப் பெண்டு' எனப் பூவால் குறிக்கப்பட்டாள். வாழ்வியலில் மட்டுமன்றி வணிகத்தையும் மலர் வைத்தே தொடங்கினர். தொழிலையும் பூ இட்டேபுனைந்தனர். பொறிகட்கும் படை க்கலன்களுக்கும் பூச்சூட்டிப் போற்றினர். பொன்னிருந்தால் பொன்னிலே பூத்தொழில் செய்தனர் பொன்னில்லையேல் பொன்னிருந்த இடத்தில் பூவை வைத்தனர்; மணத்திற்கும் பூ; பினத்திற்கும் பூ. வாழ்த்தலுக்கும் பூ; வழுத்தலுக்கும் பூ. விழாவுக்கும் பூ; இழவுக்கும் பூ. பொழுதறியவும் பூ, தொழுதமையவும் பூ. பேரிலும் மலர்ப்பெயர்; ஊரிலும் மலர்ப்பெயர். உவமைக்கும் மலர்; உணவிற்கும் மலர். மருந்துக்கும் மலர்த்தேன்; மயக்கத்திற்கும் மலர்த்தேன். சொல்லும் ஒரு மலர்; பாவும் ஒரு மாலை. போற்றுவதற்கும் பூமான்' என்றொரு பூச்சொல்; துாற்றுவதற்கும் பூ இவ்வளவுதானா என்றொரு . . . பூத்தொடர். வாழ்வின் நடைமுறைகளில் எல்லாம் பூவிற்கு இடமளித் தனர். இங்கு எழுதப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் பெருமைக் கும் தமிழ் இலக்கியத்தில் இடம் உண்டு. இதன் விரிவாக இந்நூல் விரிகின்றது. எனவே இது வரை காணப்பட்ட இப்பகுதி முன்னுரை எனலாம். இங்கே குறிக்கப்பட்ட கருத்துகளுக்கு விளக்கமும் விரிவும் சான்றுமாக வரும் பகுதிகள் அமையும். - அவ்வமைப்பும் மரபையும், முறையையும் நெறியாகக் கொண்டது. தமிழர் மலரோடு இழைந்தனர். மலரால் மரபு களைக் கண்டனர். அம் மரபில் மலர்களை முறைப்படுத்தின்ர், 崇4