பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59


மலராகும் காலத்திற்கு முன்னரே கையால் நெறித்து என்னிடம் சிறந்து கமழும் மணத்தை (நறுநாற்றத்தை) நுகர்ந்து பூரிப்பர். இதனை, 'காலமன்றியும் கையின் நெறித்த கழுநீர்க் குவளை பெரும் போதி அவிழ்த்த"12 எனப்பெருங் கதை ஆசிரியர் கொங்கு வேளிர் சுவைத்துப் பாடினார். செயற்கை யில் இவ்வாறு மலர்த்துவதைக் கையால் நெறிப்பதுடன், 'கூர் உகிர் விடுத்ததோர் கோலமாலை18 என்னுமாப்போல் கூரிய நகத்தைச் செருகியும் கோலங்காண்பர். கைவிரலால் கோதி அலைத்து வலிய அலர்த்துவர் என்பதை, 'விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் (மணம்)”14 一5丁5沉了 நக்கீரர் பாடி இம்மணம் இயற்கையில் வெளிப்படும் மணத்திலும் வேறுபட்டது எனக் காட்டினார். இதனை, 'விரலது அலைப்பாலே வலிய அலர்த்த அலர்ந்ததாகலின் வேறுபடுகின்ற நறிய மணத்தினையுடைய'15 -என்றும் 'அலர்கின்ற பருவத்தே கையால் அலர்த்தி மோந்து பார்த்தாலொத்த மிக்கு நாறுகின்ற நாற்றத்தினையுடைய 15 -என்றும் 'அகைத்தல் = வலிய மலர்த்தலுமாம்', 5 - -என்றும் உரையாசிரியர்கள் வலிய மலர்த்தலையும் அது மலிய மணத்தலையும் விளக்கினர். மணம் திறக்கப்படும் இப்பருவம் உங்களில் காதல் உணர்வு திறக்கப் படும் கட்டிளங் காளையர், கன்னியர் பருவம் போன்றது எனலாம். இப்பருவப் பெயர்களில் கன்னிகை’ என்றொரு சொல்லையும் காட்டினேன் அன்றோ? இதனால் காதல் முகைக்கும் காளையர், கன்னியர் 12 பெரு : 35 : 183-184 18 சிவ. சி : 1466 14 திருமுருகு : 198: - - 15 திருமுருகு : 196 : உரை; மது: கா 567 : உரை: தக்க : 98 ; உரைக்குறிப்பு. * : -. . . "