பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60

"முகைப் பருவத்தர்' -எனப்பட்டனர். எனது கலை யில் சிறந்து நிற்கும் சப்பான் நாட்டாரும், "மலர்ந்த மலர் முதுமையின் சின்னம்; மொட்டு - முகை குமரனின் சின்னம்’ -என வழங்குகின்றனர். இப்பருவம் கழிந்து அடுத்த பருவம் மாறும்போது எனது கன்னித்தன்மை போகின்றது. எவரும் தொடாத கன்னியாகிய என்னைக் காற்றும் வண்டும் எச்சிற்படுத்தி எனது கன்னிமையைச் சாகடித்து விடுகின்றன. இவ்வகையில் முகைப்பருவ வாழ்வு குறைந்து நிலைபெறாது அழிகின்றது. தலைவன் பிரிவால் தலைவியின் இளமைக் கழிவதைக் கூறும் தோழியை, முகை முதிர்ந்து, அடுத்த பருவம் பெறுதலால் முகைப் பருவம் அழிதல் போன்று தலைவியின் இளமை குறைந்து கழிகின்றது' -என்று உவமையாகப் பேசவைத்தார் கலித்தொகை ஆசிரியர். இவ்வாறு பல்வகையாலும் சிறப்புடையகுறிக்கத்தக்கப் பருவம் இப்பருவம். முகைப்பருவம் ஒரு காதற் பருவம் - முகைக்கு அடுத்த பருவம் போது. 4. போதுப் இதனைப் போதின்முகை",18 'முகிழ் பருவம் விரி; நாட்போது',' என்பவையும் புலப் படுத் துகின்றன. இதழ்கள் நெகிழ்ந்து இடைவெளி பெற்று முனையில் வாய் திறக்கும் பருவம் போது. இது முகைக்கும் மலருக்கும் இடைப்பட்ட சிறு நேரப் பருவம். முகை வாய்விட்டு உடையும் பருவம் என்பதை 'அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது’’20 என ஐங்குறுநூற்று அடி காட்டுகின்றது. இதைக் கன்னி நிலையிலி 16 முதியோர், இளையர், (குழந்தைகள்) முகைப்பருவத்தர்'-பரி. 10:12 17 முதிர் முகையிற்குக் கூற்றம் போல்: -கலி:17:11, 12 18 கவி 17:15, 16 20. ஐங்: 848 19 சிறுபாண் 188: -