பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

99


2.மார்பளவு சுவாசம் (Chest Breathing)

கொஞ்சம் பரவாயில்லை. இது இயல்பான சுவாசம் தான்.

3.அடிவயிற்று சுவாசம் (Abdomen Breathing)

இதைத்தான் சரியான சுவாச முறை என்பார்கள்.

நல்ல சுவாசம் உள்ளவர்கள், நலமாக வாழ்கின்றார்கள். அவர்கள், தங்களைப் போலவே மற்றவர்களும் நலமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள். உதவுகின்றவர்கள். உபதேசிக்கிறவர்கள் ஆகி உற்றுழி உதவியும் மகிழ்கிறார்கள்.

ஆகவே, நாம் சுவாசத்தை மேலும் ஆழப்படுத்தி ஆழ்ந்து சுவாசிக்க முயற்சிப்போம். தெளிவான சுவாசம் தெளிவான சுபாவம். நிர்மலமான மனது. நிந்தைகள் நீங்கிய செயல்கள், நிறைவான பயன்கள், நினைப்புக்கும் எட்டாத இறைத் தொடர்பு.

இப்படி சுற்றிச் சுற்றி வந்து நமக்கு உதவுகிற சுவாசத்தை சுகப்படுத்தி, சுபாவத்தையும் வளப்படுத்தி, சந்தோஷமாக வாழ்வோம். சந்தோஷமான வாழ்வுக்கு எளிமையான தந்திரம் இனிமையான மந்திரம், சுவாசம் என்றால், அப்படியே சுவாசிப்போம். சுகம் பெறுவோம்.