பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

105


இப்படி பல அர்த்தங்களை வைத்துத்தான், தன் கையே அதாவது தன் ஒழுக்கமே தனக்கு உதவியாக துணையாக இருந்து வாழ்வை வாழ்விக்கும், மகிழ்விக்கும், சொர்க்கத்தை அளிக்கும் என்று பழமான மொழியில் நமக்குப் போதித்தார்கள்.

ஆனால், நமது மாண்புமிகு மக்களோ, கையின் செயல்களான பறித்தல், கடைதல், தேய்த்தல், இரத்தல், சொல்லுதல், கும்பிடுதல், தொடுதல், அடித்தல், குத்தல், கட்டல், தீட்டல், வெட்டல், அறுத்தல், அளத்தல், நிறுத்தல், கிண்டல், கிளறுதல், தொளைத்தல், தோண்டல், வாரல், வகிர்தல், தடவல், சொரிதல் போன்ற காரியங்கள் தாம் தமக்கு உதவும் என்று எண்ணிவிட்டனர். அதையே தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிவைத்தனர்.

மதமும் பக்தியும் தான் மக்களுக்கு ஒழுக்கத்தைக் கூறும் வற்புறுத்தும் என்பார்கள். ஆனால் ஒரு சிறு பழமொழியும் மனிதர்களை எப்படி செம்மைப்படுத்தும் என்பதற்கு தன் கையே தனக்கு உதவி என்பது தலையாய உதாரணமாக அல்லவா திகழ்கிறது.

நமது வாரிசுகளுக்கு தன்கை என்றால் தன்மையான, உண்மையான ஒழுக்கம்; அதுவே இந்தக் கலி காலத்திலும் நம்மை கைவிடாமல் காப்பாற்றும், கஷடங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று கூறுவோம். நம் குடும்பத்தைக் காப்போம்.

இதற்கும் நம் கையே நமக்கு உதவி என்று கூறுவோம். ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுவோம். பேரின்பம் அடைவோம். ஆமாம். நாமே நமக்கு தலைவர்கள், நண்பர்கள், பகைவர்கள்.