பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 ஒன்றை ஒரு தடவை செய்துவிட்டு விட்டு விட்டால் அது புரியாது. செய்யும் செயல் தெளியாது. செய்கிற கையும் காலும் அதில் படியாது மனமும் அதில் ஒன்றிவிட முடியாது.


அதனால் தான் அதைப் பயிற்சி என்றனர். பலமுறை செய் என்றனர். மனதுக்குள்ளே அதை பலமுறை கூறிப்பார் என்றனர். நாம் தனியாக ஒரு சாலையில் போகிறோம். தந்திக்கம்பம் ஒன்று கொஞ்ச தூரத்தில் நிற்கிறது. கால்களுக்கருகில், கற்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு கல்லை எடுத்து தந்திக்கம்பத்தை குறிப்பார்த்து அடிக்கப் பார்க்கிறோம். -


பல கற்களை எறிந்து பார்த்தும், கம்பத்திற்குப் பக்கத்தில் எறிந்த கல், எட்டமாட்டேன் என்கிறது. பிறகு கற்கள் பலவற்றை வீசிப் பார்த்த பிறகு, கை பழகிக் கொள்கிறது. கண்களின் குறி வரியாக அமைகிறது. வீசிய கல், கம்பத்தில் மோதித் தெறிக்கிறது. - காரணம் என்ன?


பலமுறை எறிந்த பயிற்சி தான். ஆமாம்! முயற்சி தான் பிறகு பயிற்சியாக வந்து விட்டது. பயிற்சி என்றால் பழக்கம், கைப்பழக்கம் என்று பொருள்.


பழக்கம் என்றால் சரி, அது என்ன கைப்பழக்கம்? ஆமாம்! கை என்றால் ஒழுக்கம் என்றல்லவா பொருள். அதாவது ஒழுங்கான பழக்கம்.


சிந்திக்க சிந்திக்கத்தான் மூளையின் வளம் செழிப்படைகிறது என்பார்கள். ஒரு விஞ்ஞானி என்பவன் இரவு பகலாக சதா காலமும் ஒரு பொருளைப் பற்றி, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அதனால் தான் அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.


சிந்தை தெளிந்தவர்கள் தான் சித்தர்கள், விந்தை புரிகின்றவர்கள்தான் விஞ்ஞானிகள். அப்படி மூளையைப்