பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

111


 அது காலத்தின் கோலம். மனப் பயிற்சியிலிருந்து மாறி உடற் பயிற்சித்துறைக்கு வந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் விளக்கம் வேறாக அல்லவா போய்விட்டது. ஆனால் ஒன்று. தினம் படிக்கும் ஒருவன் மனபயில்வான் ஆகி விடுகிறான். அவனது மனோவலிமை. மன ஆற்றல் மிகப் பெரியதாகும்.


தினம் பயிற்சிக்கும் ஒருவன் தேகப் பயில்வான் ஆகிவிடுகிறான் அவனது உடல் வலிமை, உள்ளத்தின் ஆற்றல் மிகப் பெரியதாகும்.


நாம் இரண்டிலும் பயில்வான் ஆக முயற்சிக்கலாமே! முயற்சியும் பயிற்சியும் நம் கையில் தான் இருக்கிறது.


இன்றே முயற்சிக்கலாமே!


பயில்வான் என்ற வார்த்தைக்கு, எதிர்காலத்தில் ஒரு பெருமை வராமலா போகும்? நிச்சயம் வரும்.