பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

113


 விருந்து என்றால் புதுமை என்று அர்த்தம். புதியது என்று அர்த்தம்.


எதெல்லாம் நமக்குப் புதியதோ, புதுமையாகத் தெரிகிறதோ தோன்றுகிறதோ அது வெல்லாம் புதுமைதான்.


வீட்டிற்குப் புதிதாக வருகின்றவர்கள்தான் விருந்தினர்கள். அடிக்கடி வந்து போகிறவர்கள் நண்பர்கள். உறவினர்கள் தெரிந்தவர்கள் என்றுதான் அவர்களுக்குப் பெயரே ஒழிய விருந்து என்று அல்ல.


தினம் தினம் சமைத்துச் சாப்பிடுவதற்கு உணவு என்று பெயர். சிரத்தையுடன் சிறப்பாக செய்திட ஏற்பாடு செய்து சாப்பிடுவதற்குத்தான் விருந்து என்று பெயர். கால இடைவேளையைக் குறித்துக் காட்டுவதற்காக ஒரு பழமொழி. 'விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான்." விருந்து மூன்று நாளைக்கு மேல் போனால் திகட்டிவிடும். தாங்காது. சலித்துவிடும் என்பார்கள்.


சொற்பொழிவு மேடைப் பேச்செல்லாம் ஆளுக்காகத் தான் உட்கார்ந்திருப்பார்களே ஒழிய அவர்கள் பேசுகிற கருத்துக்காக அல்ல.


அரைமணிநேரம் மேடையில் பேசினால் பிரசங்கம். அதற்குமேல் போனால் அதிகப் பிரசங்கம் என்பதுதான் பழமொழி.


ஆக, வாய்க்கு விருந்து என்பது நோய்க்கு மருந்து என்பது போல எப்போதும் எல்லா நேரத்திலும் நேற்றைக்கும் நாளைக்கும் சேர்த்து இன்றைக்கும் இனிய சூழ்நிலையை உருவாக்குவது தான், மனிதர்க்கு தேவையான விருந்தாகும்.

அத்தகைய தேவையான விருந்து, அரிய விருந்து அருமையான விருந்து, அற்புதமான விருந்து, அதிசயமான விருந்து ஒன்று உண்டு. அது தேவருலகத்து அமிர்தம்