பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 இல்லை. பூலோகத்து அமிர்தம். அதைத் தேடினால் கிடைக்காதது அல்ல. கூடினால் கிடைப்பது. கைகள் எட்டுகிற தூரத்தில். இல்லை இல்லை கைக்குள் கிடைக்கிற தேனாமிர்தம் தேவாமிர்த விருந்தாவது விளையாட்டுத்தான். விளையாட்டு என்பது உடலுக்கு விருந்து. உடல் உறுப்புகளுக்கு மாமருந்து.



உடலுறுப்புக்களை இதமாக பதமாக நலமாக பலமாக வளமாக வளர்த்துக் கொடுக்கக் கூடிய வல்லமை மிக்கது விளையாட்டு விருந்து.



சிறு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைப்போல, வளர்ந்து வரும் சிறுவர் சிறுமியர்க்கு சத்துணவுபோல, வாலிப வயதினருக்கு அறுசுவை உணவு போல, வயதானவர்களுக்கு நலிவு தீர்க்கும் டானிக் போல, நோயாளிகளுக்கு குணமாக்கும் மாமருந்து போல, அனைத்துத்தர மக்களுக்கும் ஆற்றல் மிகு விருந்தாக விளங்குவது விளையாட்டுக்கள்தான்.



விளையாட்டைப்பற்றி நினைக்கும் பொழுது இன்பம், விளையாடிக் கொண்டிருக்கிறபொழுதே இன்பம், விளையாடி முடித்த பிறகும் இன்பம்.



அந்த இன்பங்களின் வளர்ச்சி, ஆடியவரின் வாழ்க்கையிலே ஆனந்த அருவியாகத் துள்ளிக் குதித்துக் கொண்டே இருப்பதுதான் விளையாட்டின் பெருமை.



விருந்தை புதுமை என்று கூறினால், புதியது என்று பேசினால், விளையாட்டு எப்படி விருந்தாகும்?



விளையாட்டை தினம் தினம் விளையாடினால், சலிக்காதா? எரிச்சல் வராதா? வராது. நிச்சயம் வராது.



எரிச்சலும் ஏற்படாது. ஏமாற்றமும் வந்து விடாது.


அதற்கு ஒரே ஒரு காரணம் உண்டு