பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

127



சுவாசம். தீக்கு வெப்பம். மன நினைவுகளுக்கு ஆகாயம் என்ற அமைப்பை ஆராய்ந்தறிகிறபோது, நாம் அதிசயப்பட்டு வியக்கிறோம்.


இவற்றை எப்போதும் நமக்கு நினைவு படுத்தவே, நமது ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விரலும், உடலின் ஒவ்வொரு பகுதியுடன், இயற்கையின் பஞ்சபூத சக்தியுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள்.


கட்டை விரல் நெருப்பையும், ஆள் காட்டி விரல் வாயுவையும், நடுவிரல் ஆகாயத்தையும் மோதிர விரல் பூமியையும் சுண்டு விரல் நீரையும் பிரதிபலிக்கின்றன.


இந்த ஐந்து விரல்களில் ஏற்படுத்திக் கொள்கிற (நடன) முத்திரைகளால், உடலில் இருக்கிற ஐம்பூதங்களையும் சமன் செய்து, மிகுதியாலும் குறைவாலும் ஏற்படுகிற உடல் நோய்களை தீர்க்க முடியும் என்பது மருத்துவர்களின் கண்டு பிடிப்பாகும்.


பஞ்சேந்திரியங்கள் படுத்துகிறபாடுதான் நமக்குத் தெரியுமே. இந்த இந்திரியங்களை அடக்கி வாழத் தெரியாமல், வாழ முடியாமல் இடறி விழுகிற எல்லாருமே, இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாகிப் போகின்றனர். நொந்து நைந்து சாகின்றனர். 'விந்து விட்டவன் நொந்து கெட்டான்' என்பது நம் பழமொழி.


இந்த இந்திரியங்களின் இச்சைகளை அடக்கி, அவற்றின் ஆட்சியை அழித்து, அகங்காரங்களைத் தொலைத்து, செம்மாந்து எழுந்து நிற்கிற சிறப்புக்குரியவரை அந்நாளில் இந்திரன் என்று அழைத்தனர். சுரன், அசுரன், நரன், மரன், பாமரன், அறன் என்பதுபோலவே இந்திரன் என்ற சொல்லும் அமைந்துள்ளது.