பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

133



செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு
அல்லல் நீத்த உவகை நான்கு

என்று தொல்காப்பியர் கூறுகிறார்.


செல்வம் என்றால் பொருள் என்றும், புலன் என்றால் ஐம்புலன் என்றும், புணர்வு என்றால் உடலுறவு என்றும், விளையாட்டு என்றால் விரும்பியதுபோல ஓடி ஆடி மகிழ்வது என்றும் பொருள் கூறுகின்றார்கள்.


இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே
அன்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால்
இழத்தலும் துன்பமே யாம்!

என்று நீதி வெண்பா பாடுகிறது.


புலன்களை ஐந்து தலை நாகம் என்றும், ஆங்கார முதலைகள் என்றும், கட்டுக்கடங்காத வேட்டை நாய்கள் என்றும், மக்கள் பதறும்போது, அல்லல் நீத்த உவகை எப்படி வரும்?


‘அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை’ என்று திருமூலரும், ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ என்று பழமொழியும் புணர்வின் பேரழிவு சக்தியை, பெருமூச்சுடன் புலம்புவதையும் நாம் காண்கிறோம்.


ஆக, விளையாட்டு என்பது விளைந்த இயக்கம், செம்மையான செயல்பாடு, மனம் விரும்புகிற வினைகள், உடல்நலம் பேணும் பயிற்சிகள் என்பதால், விளையாட்டே இன்பம் தரும் காயகற்பம் என்றும் நாம் கூறலாம்.


உடலுக்கு நலமும், மனதுக்கு இன்பமும் வேண்டும் என்கிறபோது, உடலுக்கு நலம் எப்படி வரும் என்பதற்கு