பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அதையே திருமூலர் மிதா அசனி என்றார். மிதமான அளவு உண் என்றார். மிதா அசணியாளர்களே சுகாசனியாகிறார்கள்.


உடம்புக்குப் பாதகமான ஏழு காரியங்களில், போஜனப் பிரியம் என்பது பொல்லாதது என்று வேதங்கள் வியாகூலப் படுகின்றன.


நமது நாக்கில் 9000 சுவை நரம்புகள் இருப்பதால்தான், வயிற்றுக்குப் பாடுகளும் வாழ்வுக்குக் கேடுகளும் விளைகின்றன. உணவடக்கம் என்பது உணர்வடக்கம் ஆகும்.


உறக்கம்: உற என்றால் பொருந்த, கம் என்றால் சந்தோஷம். சந்தோஷம் பொருந்த ஓய்வெடுக்கும் நிலைக்கே உறக்கம் என்று பெயர்.


எவன் நலம் உள்ளவன் என்பதற்கு, இரண்டு வாக்கியங்களில் இலக்கணம் அமைத்துத் தந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். எவன் படுத்தவுடன் உறங்குகிறானோ அவன் பாக்கியவான். எவன் தூங்கி விழித்ததும் காலைக் கடனை முடிக்கிறானோ அவனே பாக்கியவான்.


படுத்தவுடன் உறங்குகிறவனுக்கு கவலைகள் கிடையாது. எழுந்தவுடன் காலைக்கடன் முடிப்பவனுக்கு உடலில் கோளாறுகள் கிடையாது. நல்ல மனமும் நல்ல உடலும் தானே நல்ல நலத்திற்கு இலக்கியம்.


முட்டாளுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்று ஒரு பழமொழி. படுக்கையறைக்குள் பிரச்சினைகளைக் கொண்டு செல்பவன் படுத்து படுத்து புரள்வானே தவிர, அடுத்து உறங்க மாட்டான்.


சிந்திக்காத முட்டாள்போல, சாந்தத்துடன் தூங்க வேண்டும். ஏன் தூக்கம் எட்டுமணி நேரம் வேண்டும்?