பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

137



ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தூங்குகிறபோது இதயத்திற்கு ஓய்வு, பகல் நேர உழைப்பில் பங்கப்பட்டுப் போன கோடிக்கணக்கான செல்கள், மீண்டும் உருவாக்கப்படுகின்றன. புது செல்கள், புதிய தெம்புடன் நரம்புகள் புத்துணர்ச்சி, களைப்பு, நீங்கி எழுச்சி.


எப்படி உறங்க வேண்டும்? வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்.


செத்துப் போனது போல உறங்கவேண்டும். அப்படி தூங்கி விழிக்கும்போது, பிறப்பாகிய புதுமையும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது.


உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு


நன்றாகத் தூங்கத் தெரிந்தவனும், தூங்க முடிந்தவனும் தான் வாழ்க்கையில் வற்றாத இன்பங்களைப் பெறுகிறான்.


உழைப்பு உழைப்பு என்றதும் மக்களுக்கு உறுத்தல்தான் உண்டாகிறது. அப்படி ஒரு வெறுப்பு உழைப்பின் மீது. உழைக்கப் பிறந்ததுதான் உடல் என்பதை அறியாமல், எல்லோரும் உழப்புகின்றார்கள். குழப்புகின்றார்கள்.


பயன்படுத்தப்படாத இரும்பு துரு பிடித்து இற்றுப் போவதுபோல, உழைக்காத உடம்பு நலிந்து, மெலிந்து, நைந்து நாறி வெற்றுடம்பாகிப் போகிறது.


உழைப்பு என்றாலே சம்பாதித்தல் என்பது அர்த்தம். உழைப்பவனுக்கு உடலில் சோம்பல் போகிறது. சக்தி நிறைகிறது. முகத்திலே பொலிவும் தெளிவும் உண்டாகிறது. வலிமைமிகுகிறது.