பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உழைப்பவனுக்கு எப்போதும் ஊதியமாக உற்சாகமும், பொருளும் கிடைக்கிறது.


ஒருவர் ஏன் சீக்கிரமாக முதுமை அடைந்து விடுகிறார் என்றால், அவருக்கு உழைப்பின்மையே காரணம். முதுமை எப்படி ஏற்படுகிறது? உழைக்காதவன் முதுகில் ஏறி எப்படி சவாரி செய்ய முடியும்?


1. உழைக்காதவன் இதயமானது, இறைக்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது (6முதல் 8 விழுக்காடு), இரத்த ஓட்டம் உடலுக்குள் குறைகிறபோது செல்கள் எல்லாம் சீரழிவுக்குள்ளாகின்றன.


2. இரத்த ஓட்டம் சீராக இல்லாததால், இரத்த அழுத்த நோய் ஏற்பட்டு விடுகிறது (5முதல் 6 விழுக்காடு)


3. உடலிலுள்ள தசைகள் இறுக்கம் குறைந்து வலிமையை இழக்க, உடலில் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் குறைய, தொய்வும் நொய்வும் உண்டாகி தொள தொள வாக்கி தள்ளாடவைக்கிறது.


4. இரத்தக் குழாய்களின் விரிந்து சுருங்கும் இயல்பு குறைந்து. விறைப்புத் தன்மை ஏற்பட்டு, உடல் சக்தியை வீணடித்து விடுகிறது.


5. உயிர்க் காற்றை சுவாசிக்கும் ஆற்றல் குறைந்து போகவே, உயிர்ப்பு சக்தி குறைவதால், உடலுக்கு வயதுக்கு மீறிய வயோதிகத் தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது.


உழைப்பை மறந்தவர்க்கெல்லாம் இழப்புகள் அதிகம். அதனால்தான் உடற்பயிற்சிகளை நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள்.