பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

139



உடற்பயிற்சி அப்படி என்னதான் செய்கிறது? உதவுகிறது.


1. உடலிலுள்ள வெப்பத்தை சீராக சமப்படுத்துகிறது.


2.வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் உடலைத் தூய்மைப்படுத்துகிறது.


3. உடலில் உள்ள ஏறத்தாழ 11 காலன் அளவுள்ள தண்ணீரின் ஓட்டத்தைத் தடையில்லாமல் ஓடச் செய்து உடலைக் காக்க உதவுகிறது.


4. உயிர்க்காற்றின் அளவை காற்றுப் பைக்குள் அதிகமாக்கி, உறுப்புக்களை புத்துணர்ச்சி கொள்ள வைக்கிறது.


5. வெளியில் திரிகின்ற வளியை இழுத்து, வயமாக அடக்கி, பளிங்கொத்துக் காயத்தை பளபளப்பாக்கி, தோற்றத்தில் ஏற்றமுறச் செய்கிறது.


6. வளி முதலாக மூன்றையும் வயப்படுத்தி, நெறிப்படுத்தி, சுகப்படுத்தி, பலப்படுத்துகிற நற்பணி மன்றமாக உடற்பயிற்சி உலா வருகிறது.


கிராமியப் பழமொழி ஒன்று உடல் நலத்திற்கு உதவுகிற பழக்க வழக்கத்தை உறுதிப்படுத்திக் கூறுகிறது.


ஒரடி நடவேன், ஈரடி கிடவேன்
இருந்து உண்னேன், கிடந்து உறங்கேன்


உச்சி வெயிலில் நிழல் ஓரடி இருப்பது போன்ற வேளையில் நடக்க மாட்டேன். வெப்பத்திலிருந்து காத்துக் கொள்வேன்.