பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஈரத்தில் இருந்து என் சீத நிலையை கெடுத்துக் கொள்ள மாட்டேன். (தண்ணீரின் குளிர்ச்சியிலிருந்து காத்துக்கொள்வேன்)


உழைக்காமல் இருந்து உண்ண மாட்டேன். உழைக்கும் போது தான் உயிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் நிறைவதால், காற்றினை கையகப்படுத்தி சக்தி பெறுவேன்.


தூக்கம்தான் பெரிதென்று, சோம்பித் திரியேன். கிடந்து உறங்க மாட்டேன்.


இப்படியாக, உடலைப் பொருள் போல் நினைத்து, பொன் போலக் காத்து வருகிறபோது, உடலுக்கு நலம் பெருகும். வியாபிக்கின்ற தீயான, வியாதியானது விலகி ஓடும்.


நலிவு தருகிற நல்குரவு எனும் வெறுமையானது, உடலை அண்ட விடாமல் அகற்றி ஒட்டும்.


வாய்ப்பைக் கருதி அடங்கிக் கிடக்கின்ற நோய்க்கூட்டம், உடலுக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.


உடற்பயிற்சி செய்து உடல்நலம் பேணுவோம். உலகில் பேரின்பம் காணுவோம். இதை உறுதியாக ஏற்று வாழ இன்றே சபதம் பூணுவோம்.