பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 விஞ்ஞானிகள் இன்று மிகவும் அரிதின் முயன்று கண்டுபிடித்திருக்கும் இந்த அரிய உண்மையை, அன்றே நமது அருமைக் கவிஞர் மிகத் தெளிவாக சுவையாக எழுதிச் சென்றிருக்கிறார்.

நரம்பு கோணுகிறபோது, நலிவடைகிறபோது, உடல் செழுமையே நாசமாகிப் போய்விடுகின்றது. நரம்புக் கோளாறுகள் உண்டாக்கும் கொடுமைகள் எத்தனை எத்தனையோ!

உடலில் நடுக்கம், (Shivering); உடலில் குத்தல் உணர்வுகள் (Tingling) குறிப்பிட்ட சில இடங்களில் வலியும் வேதனையும் நடையில் தள்ளாட்டம் (Gait), தலைச் சுற்றல், தசைச்சுருக்கம் போன்ற விளைவுகள், நினைப்பது போல் செயல்பட முடியாத தசைகளின் இயலாமை. இறுதியாக, கைகால் விளங்காத வாதமும் வர எதுவாகிறது.

இத்தனைக் கொடுமைகளும் நரம்புகள் கோணுகிற போதுதான் படமெடுத்தாடுகின்றன.

நரம்பு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதை "எஃகு போன்ற நரம்பு என்று நம் முன்னோர் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

எஃகு நரம்பு எப்பொழுது ஏற்படும்? உடலை உண்மையாக மதித்து, உறுதியாக நேசித்து, உவப்புடன் உழைத்து, பக்குவமாகப் பயிற்சிகளை மேற்கொள்கிற போதுதான், அந்த உறுதியான நரம்புகள் உண்டாகும்.


நரம்புகளில் உறுதி என்றால் நடையில் உறுதி, செயலில் உறுதி, சிந்தனையில் உறுதி செழுமையான வாழ்வுப் பணிகளில் உறுதி.

இத்தகைய உறுதி வாய்ந்த நரம்புகளைக் காப்பதில், உரம் சேர்ப்பதில், நாமும் உறுதியாக இருப்போம் உலகில் உயர்ந்த வாழ்வு பெற்றுச் சிறப்போம்.