பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

16


 பொருளும் - பொருளும்


இந்த பொருளைப் பற்றிப் பாடப்பட்ட இந்தப் பாடலுக்குரிய பொருள் தான் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்.


படிக்காதவனாக இருந்தாலும் ஒருவனிடம் பணம் இருந்தால், அவனைச் சுற்றி வாழ்கிற எல்லா மக்களும் போய் எதிர்கொண்டு வணங்கி, ஏற்றங்கள் பல செய்து, புகழ் பாடி நிற்பர்.


அப்படிப்பட்ட பெருமை மிகுந்த பொருள் இல்லா தவனை, அவனுடைய மனைவியும் மதிக்கமாட்டாள். விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வருகின்ற எந்த சொல்லையும் ஏற்பவர் யாருமில்லை. பேசுகிற பேச்சுக்குப் பெருமையோ, சிறு மரியாதையோ இல்லை.


இப்படித்தான் இந்தப் பாடலுக்குப் பொருள் சொன்னார்கள். காலங்காலமாக, இப்படித் தான் மாணவர்களும் கற்றுக் கொண்டு, மனப்பாடம் செய்து, தங்கள் கருத்தை உறுதி செய்து கொண்டார்கள். கொள்கின்றார்கள்.


சமுதாய அமைப்பு


கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அவருக்கு பொருள் அவசியமில்லை. கல்வியே போதும், கல்வியே செல்வம். இப்படி ஒரு பாடல்.


கல்லாதவர்க்கு அறிவும் படிப்பும் அற்றுப் போவதால், அவருக்குப் பெருமை. பணம் இருப்பது தான். பணமே போதும். இப்படி ஒரு சமுதாய நிலை.


இப்படி எண்ணத் தோன்றிய வாழ்க்கை முறை வேறு வகையிலும் எண்ணத் தூண்டியது. பணமற்ற அறிஞர்க்கு