பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளயாட்டு இன்பம்

19



நமது பொருள்


இப்படிப்பட்ட ஒழுக்கமான உடலை உடையவன் ஒருவன் படிக்காதவனாக இருந்தாலும், அவனைப்பார்த்து எல்லோரும் எதிர்கொண்டு வரவேற்பார்கள். வாழ்த்தி மரியாதை அளிப்பார்கள்.


அப்படிப்பட்ட நல்ல ஒழுக்கமான, வலிமையான உடல் இல்லாத ஒருவனை, அவன் மனைவியே மதிக்கமாட்டாள். விரும்பமாட்டாள். பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் நலிந்த உடலாளனாக இருப்பதால், அவன் வாய் வார்த்தையும் வரவேற்பைப் பெறாது என்ற பொருளை இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.


வலிமையும், மனைவியும்


வலிமையுடையவன் கம்பீரமாக இருப்பான். அவன் செயல்களில் தெளிவும் திருப்தியும் இருக்கும். திருப்தி யடைகிற மனைவிதான், கணவனை தெய்வமாகவும் மதிப்பாள்.


நோயுள்ள நோஞ்சான் கணவனை எந்த மனைவி மதிப்பாள்? அவனைத்தான் ஆங்கிலத்தில் (Hen pecked husband) என்று அழைப்பார்கள். பெட்டைக்கோழி கொத்துகிற சேவலின் நிலை உங்களுக்குத் தெரியுமே! அந்த ஆண் மகன் கையாலாகாதவன் என்றே அவமதிக்கப்படுகிறான்.


நல்ல உத்தியோகத்தில் இருக்கிற ஒருவன், தன் மனைவிக்கு எல்லாவித வசதிகளைச் செய்து தந்தாலும், அவன் உடலில் வலிமை இல்லாதவனாக இருக்கிறபோது, அவன் மனைவி அவனுக்குத் தருகிற மதிப்பும் மரியாதையும் மிகுந்த வித்தியாசமாகவே இருக்கும்.