பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

21


கோடிக்கணக்கில் பணம் குவித்து வைத்திருக்கின்ற குஷ்டரோகிக்கு எத்தனை பெருமை கிடைத்துவிடும்?

'நன்றாக இருக்கும் வரையில் நான்கு பேர் நம்மை மதிப்பார்கள்' என்ற பழமொழியும் நமக்கு நன்றாகத் தெரியுமே!

எனவேதான், பொருள் என்னும் வார்த்தை பொருள் பொதிந்த வார்த்தையாக, அந்தப் பாடலிலே அமைந்திருக்கிறது.

உடலும் பொருளும்

வாய்க்கு சுவை, வயிற்றுக்கு சுமை, மேனிக்கு உடை, மனதுக்கு அசகாய கற்பனைகள். இப்படியே காலத்தை கடத்திவிடுவது அல்ல மனித வாழ்க்கை.

மற்றவர்களையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தலைவணங்கும் படி செய்து உயர்ந்த நிலையில் வாழ்கிறவனே மனிதன் என்ற பெயரைப் பெறுகிறான். மற்றவர்களைச் சுற்றியே வாழ்கிறவர்கள் மனிதர்கள் என்ற பெயரைக் கொண்ட பிராணிகள்.

ஆகவே, உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்திருக்கிறது என்ற உண்மையை, மூலதனம் என்று நம் முன்னோர்கள் உடலை அழைத்து மகிழ்ந்த ஒப்பற்ற பேரறிவை எண்ணிப்பாருங்கள்.

மூலதனம் என்பது முதல். முதல் என்பது பொருள். அந்தப் பொருளைத்தான் உடல் என்றனர்.

முதலை, மூலதனத்தைக் காத்து வாழ்பவன்தான் மனமகிழ்ச்சியுடன், மகோன்னதமான வாழ்க்கையை வாழ்கிறான். முதலை இழந்து போகிறவன் முற்றிலுமாக அழிந்தல்லவா போகிறான். சாகிறான்.