பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

29


 சக்தியைத் தேட வேண்டுமென்றால் உழைப்பு தான் முதலில் வேண்டும்.

உழைப்பு தான் உறுப்புக்களைத் திடமாக்குகின்றன. சோம்பலின் ஏய்ப்பு உறுப்புகளின் வேகத்தை முடமாக்கு கின்றன.

சேர்க்கும் சிந்தையை நாம் மேற்கொண்டோ மானால், உதவுவதற்காக ஒடோடி வருபவை உடற்பயிற்சிகளே!

நாகரிகக் கால வாழ்க்கை உடலை நலிய வைக்கின்றன; உடலின் சக்தியை வீணாக்குகிற கவர்ச்சிகள் நிறைய இருக்கின்றன. உடலுறவு பற்றிய பேச்சும், படங்களும், சினிமாக்களும், செயல்களும் இளைஞர்களை சுண்டி இழுத்து, சோர்வடையச் செய்து விடுகின்றன.

அதனால் தான், விந்துவிட்டவன் நொந்து கெட்டான் என்று பழமொழியும் வந்திருக்கிறது.

இரத்த ஓட்டத்தை விரிவுபடுத்த, விரைவுபடுத்த, ஆழ்ந்த சுவாசம் வேண்டும். ஆழ்ந்த சுவாசத்தை ஏற்படுத்தும் வேகம் உடற்பயிற்சிகளுக்கே உண்டு.

உடற்பயிற்சிகள் செய்கிற ஒவ்வொரு நாளும் தேகத்தில் சக்தியைச் சேர்க்கின்ற சுகமான நாட்களாகும்.

இறுதியில் ஒரு குறிப்பு

உடலில் சக்தியை சேகரிக்க முயற்சித்தவனுக்கு, அந்தக் கஷ்டம் நன்றாகவே புரியும். கஷடப்பட்டுச் சேர்த்த உடல் சக்தியை, கஞ்சன் போல் காக்கவே எவனும் முயல்வான்.

உடலில் சேர்க்கிற சக்தி, அவனை வலிமை யுடையவனாக மட்டுமல்ல; அழகுடையவனாகவும் மாற்றி விடுகிறது. உடலின் அழகைப் பார்த்து விட்ட ஒருவனுக்கு,