பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதை அழிக்க மனம் வரவே வராது. அழகைக் காக்கும் கலையை, உடலைக் காக்கும் கலையை, உடற் பயிற்சிகள் கற்றுத் தருகின்றன. காத்துத் தருகின்றன.

'பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்' என்பாள் ஒளவை. அதுபோலவே பண்ணிய பயிற்சியில் புண்ணியமாகக் கண்ணியம் தெரியும். கட்டுப்பாடு தெரியும். கடமையும் புரியும்.

ஆகவே, முதலாக விளங்கும் தேகத்தை முதிராமல் காக்கவும், சிதறாமல் சேர்க்கவும், பதறாமல் காரியம் செய்து புகழைச் சேர்க்கவும், வாழ்கிற நாளெல்லாம் வானமுகத் திருநாளாக்கி வாழ்ந்திட, இளமையிலேயே முயல வேண்டும் முதுமையிலும் தொடர்ந்து செய்தல் வேண்டும் என்பதே ஒளவையின் அவா... அதுவே நமது ஆவலும்.